டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்!-வீடியோ

    டெல்லி: இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    பீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பெட்ரோல் சேமிப்பு கிடங்குக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இருநாடுகளிடையே முடிவு எட்டப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து ஜூன் மாதம் கருத்து தெரிவித்த நேபாளத்துக்கு இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி, நேபாளத்தில் மிகப் பெரும் மாற்றத்துக்கு இத்திட்டம் உதவும் என குறிப்பிட்டிருந்தார்.

    PM Modi inaugurats Oil Pipeline to Nepal

    மொத்தம் ரூ325 கோடி மதிப்பிலானது இத்திட்டம். பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் அனுப்பப்பட உள்ளது.

    தலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த தலைக்கு வெள்ளை கலர் டை.. ஸீரோ பவர் கண்ணாடி.. வீல் சேரில் வந்த "வயசான" இளைஞரை அள்ளி சென்ற போலீஸ்!

    இத்திட்டத்தை வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, காத்மண்டில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெற்காசியாவில் பெட்ரோல் அனுப்புவதற்காக எல்லைகளை கடந்து அமைக்கப்படும் முதலாவது திட்டம் இது. இத்திட்டமானது குறிப்பிட்ட காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் இது.

    2015-ம் ஆண்டு நேபாளம் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீள் கட்டமைப்பு பணிகளுக்கு நட்பு நாடான இந்தியா கை கொடுத்து உதவியது. இந்தியாவின் சார்பாக கூர்கா மற்றும் நுவகோட் மாவட்டங்களில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    English summary
    Prime Minister Modi today inagurated the oil pipeline to Nepal from Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X