டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியிடம் பேட்டியை எதிர்பார்க்கலாமா?... 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செய்தியாளர்களை சந்திக்காத நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராகும் பட்சத்தில் செய்தியாளர்களை எப்போது சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

7 ம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் ஓய்ந்ததை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திப்பது அதுவே முதன்முறையாகும்.

அப்போது பேசிய அமித் ஷா, இந்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. வரும் மக்களவை தேர்தலிலும் பா.ஜ.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..! 2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..!

அமித்ஷா பதில்

அமித்ஷா பதில்

மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர் என்றார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்தார். ஆனால், பிரதமர் மோடி எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், நடப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். மோடியிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அமித் ஷாவிடம் கேட்டும்படி திருப்பி விட்டார்.

மோடி மௌனம் ஏன்?

மோடி மௌனம் ஏன்?

மேடைகளில் எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடும் மோடி, செய்தியாளர்கள் சந்திப்பில் மௌனம் காத்தது பலரையும் வியப்படைய வைத்தது. எதிர்க்கட்சிகள் குழம்பி போயினர். தோல்வி பயத்தால் மோடி வாய் திறக்க மறுப்பதாக ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது? நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது?

ஒருதலைப்பட்சம்

ஒருதலைப்பட்சம்

அதே நேரம், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பை பிரதமர் நடத்துவது முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு என்றார். இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக அமைந்து இருந்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பேட்டி கொடுப்பாரா?

பேட்டி கொடுப்பாரா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித குகையில் 18 மணி நேர தியானத்துக்குப்பின் பேட்டியளித்த மோடி, எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. இந்திய மக்களுக்காக தான் கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம், எடுப்பதற்காக அல்ல என்று பேசினார். இனி வரும் நாட்களில் இது போல், செய்தியாளர்களை சந்திப்பாரா என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

பெரம்பூரில் மக்கள் நீதி மய்யம் அபாரம்.. அதிமுகவுடன் கடும் போட்டி.. அமமுக வெற்றிவேல் பரிதாபம் பெரம்பூரில் மக்கள் நீதி மய்யம் அபாரம்.. அதிமுகவுடன் கடும் போட்டி.. அமமுக வெற்றிவேல் பரிதாபம்

English summary
Will Modi meet journalists? PM Modi Interviewed only once in 5 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X