டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் தொற்று அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    அதிர வைக்கும் கொரோனாவின் புதிய உச்சம்: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் தொற்று!

    இதில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.

    தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அட கொடுமையே.. மகாராஷ்டிரா கொரோனா சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து.. 13 நோயாளிகள் உயிரிழப்பு! அட கொடுமையே.. மகாராஷ்டிரா கொரோனா சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து.. 13 நோயாளிகள் உயிரிழப்பு!

    கொரோனா பேயாட்டம்

    கொரோனா பேயாட்டம்

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 3,00,000-க்கும் மேல் கடந்து சென்று விட்டது. தினசரி உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது . தினசரி உயிரிழப்பு 2,500-ஐ கடந்து செல்கிறது. கொரோனவை தடுக்க தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    பிரதமர் மோடி ஆலோசனை

    பிரதமர் மோடி ஆலோசனை

    நாட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில்தான் தொற்று மொத்த பாதிப்பில் 80% மேல் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். காணொளி மூலமாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி,, உ.பி., கர்நாடகம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.

     ஆக்சிஜன் தட்டுப்பாடு

    ஆக்சிஜன் தட்டுப்பாடு

    தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பல்வேறு கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

    பிரசாரம் ரத்து

    பிரசாரம் ரத்து

    கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது மேற்கு வங்க பிரசார பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் இல்லை. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவுகிறது. நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.

    English summary
    Prime Minister Narendra Modi is holding consultations with the chief ministers of the states where corona is on the rise across the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X