டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நம்பர் 1".. உலகிலேயே செல்வாக்கான தலைவர்.. "முதலிடம்".. யார் தெரியும்ல?.. பாராட்டிய அமெரிக்கா

உலகிலேயே செல்வாக்கான தலைவராக மோடி முதலிடத்தை பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

புதுடில்லி: உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற புலனாய்வு நிறுவனம் உள்ளது.. அதன் பெயர் "மார்னிங் கன்சல்ட்".. இந்த நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது..

உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழம்.. தோட்டத்தை பாதுகாக்க 4 காவலர்கள், 6 நாய்களை நியமித்த தம்பதி உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழம்.. தோட்டத்தை பாதுகாக்க 4 காவலர்கள், 6 நாய்களை நியமித்த தம்பதி

அதன்படி, உலக அளவில் யாரெல்லாம் செல்வாக்கு மிக்க தலைவர்கள, யாரெல்லாம் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே அந்த ஆய்வு.

 தலைவர்கள்

தலைவர்கள்

இதை வருடாவருடம் அந்த நிறுவனம் நடத்துவது வழக்கம். இந்த முறையும் நடத்தி, அதன் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில்தான் நம் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.. உலகிலேயே மோடிதான் நம்பர் என்கிறது அந்தநிறுவனம்.. உலகத்தில் உள்ள மற்ற எல்லா தலைவர்களையும்விடவும், நம் பிரதமர்தான் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று அந்த நிறுவனம் சொல்கிறது.

 மோடி

மோடி

இதுதான் பலருக்கு ஆச்சரியத்தை தந்து வருகிறது.. கொரோனா தொற்றில் டாப் 2வது இடத்தில் இந்தியா இருக்கிறது.. இதை இந்த அமெரிக்காதான் விமர்சனமும் செய்தது.. இந்த 2வது அலை பரவலின்போது, பிரதமர் மோடிக்கு செல்வாக்கு வெகுவாக குறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டது..

 அமெரிக்கா

அமெரிக்கா

ஆனாலும், சரிவு இருந்தபோதிலும், பிரதமர் மோடியின் செல்வாக்கு 66 சதவீதமாக உள்ளன என்றும், இது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட நாடுகளின் உலக தலைவர்களை விட சிறந்ததாக உள்ளதாகவும் அந்த சர்வே தெரிவிக்கிறது.

இவருக்கு அடுத்தபடியாக, 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.. 4 முதல் 10 இடங்கள் முறையே, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அதாவது 54 சதவீதமும், ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 53 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளனர்.

 ஆய்வு

ஆய்வு

ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ வெறும் 53 சதவீத ஆதரவையே பெற்றுள்ளார்.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48%, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 37%, ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் 36% ஆகியோர் ஆதரவை பெற்றுள்ளனர். அதாவது, அமெரிக்காவின் ஜோபிடனையே பின்னுக்கு தள்ளிவிட்டு மற்ற 13 நாட்டு தலைவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, நம் பிரதமர் டாப் லிஸ்ட்டில் முதல் ரேங்க் பெற்றுள்ளார்.

 சிறந்த தலைவர்

சிறந்த தலைவர்

இப்படித்தான் 6 மாசத்துக்கு முன்பும் இதே நிறுவனம், இதே போன்ற சர்வேயை நடத்தியது.. அப்போதும் மோடிதான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.. அப்போதும் தொற்று பாதிப்பில் இந்தியா சிக்கி இருந்தது.. "தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை திறம்பட கையாண்டதற்காகவும், கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிப்பதற்காகவும் மீண்டும் மிகவும் பிரபலமான அரசாங்க தலைவராக மோடி உருவெடுத்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு

ஆய்வு

மொத்த உலகையும் கொரோனா பீடித்து கொண்டிருக்கும் நிலையில், எல்லா நாடுகளும் தொற்றை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளது ஆச்சரியமான ஒன்று.. அதிலும் தொற்று பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருந்தபோதிலும், மோடிக்கான செல்வாக்கு கொஞ்சம்கூட குறையவில்லை என்பதையே இந்த சர்வே எடுத்துக்காட்டுகிறது.

English summary
PM Modi is in No 1 position ahead of Joe biden in approval rating of world leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X