டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசைக்க முடியாத மோடியின் செல்வாக்கு.. இப்போதும் இவர்தான் பெஸ்ட்.. மூட் ஆப் நேஷன் சர்வே முடிவுகள்!

இந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக 68% மக்கள் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக 68% மக்கள் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த வருட பாஜக ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்தும், கடந்த 6 மாத ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்தும் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தி இருக்கிறது. கடந்த 6 மாதங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைய அதிரடி முடிவுகளை எடுத்தது.

கடந்த 70 வருடங்களாக இந்தியாவில் மாற்றப்படாமல் இருந்த பல விஷயங்களை அதிரடியாக, பாஜக மாற்றிக்காட்டியது. மிக முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சோ குடும்பத்திடம் இருந்து துக்ளக்கை அபகரித்தது ஏன்?.. குருமூர்த்திக்கு சு.சாமி பரபர கேள்விசோ குடும்பத்திடம் இருந்து துக்ளக்கை அபகரித்தது ஏன்?.. குருமூர்த்திக்கு சு.சாமி பரபர கேள்வி

காஷ்மீர் எப்படி

காஷ்மீர் எப்படி

காஷ்மீர் பிரச்சனை மட்டுமின்றி, சிஏஏ சட்டம் கொண்டு வந்தது, அசாமில் என்ஆர்சி கொண்டு வந்தது. ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை செய்வது, முத்தலாக் சட்டம் என்று நிறைய அதிரடியை பாஜக மேற்கொண்டுள்ளது. இதில் சிஏஏ உள்ளிட்ட சட்டங்கள் பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சிஏஏ மற்றும் பொருளாதார சீர்குலைவு காரணமாக பாஜகவிற்கு நாடு முழுக்க எதிர்ப்பு ஏற்பட்டது.

நாடு முழுக்க

நாடு முழுக்க

நாடு முழுக்க இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்தது. ஆனால் இத்தனை இருந்தும் பிரதமர் மோடிதான் இப்போதும் இந்தியாவின் அதிக செல்வாக்கு மிகுந்த பிரதமராக இருக்கிறார். அதன்படி இந்த சர்வேயில் மொத்தம் 68% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது அல்லது சிறப்பாக இருக்கிறது என்று பதில் அளித்துள்ளனர். பிரதமர் மோடி நாட்டை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று பதில் அளித்துள்ளனர்.

குறைந்தது

குறைந்தது

ஆனால் 2019 ஆகஸ்டில் நடந்த சர்வேயை விட இதில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளது . 2019 ஆகஸ்டில் மோடியின் செல்வாக்கு 71% இருந்தது. தற்போது அதில் 3% குறைந்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு கொஞ்சமாக சரிந்துள்ளது. ஆனாலும் பிரதமர் மோடி இப்போதுதான் நன்றாக ஆட்சி செய்கிறார் என்றுதான் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் மோடியின் புகழை பெரிய அளவில் சரித்து இருக்கிறது. தொடர் பொருளாதார சரிவும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காஷ்மீர் பிரச்சனையும் மோடியின் புகழை சரித்துள்ளது. ஆனால் இதெல்லாம் மோடியின் புகழை ஒரே அடியாக சரிக்க முடியவில்லை. இப்போதும் அவரின் ஆட்சியை நாடு முழுக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்று மூட் ஆப் நேஷன் சர்வே தெரிவிக்கிறது.

English summary
PM Modi is still the best even after CAA and NRC issues says Recent India Today Mood of Nation Survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X