டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளைக்கு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை சிங்கப்பூர் செல்கிறார். இதுகுறித்து அவர் டிவீட் போட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 13வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினரா கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொள்ளும் 5வது கிழக்கு ஆசிய மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பிரதமர் மோடி இன்று இரவு சிங்கப்பூர் செல்கிறார்.

PM Modi to leave for Singapore tonight

2 நாட்கள் மோடி சிங்கப்பூரில் இருப்பார். அப்போது 2வது பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபுவும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதுதவிர சிங்கப்பூர் பின்டெக் விழாவிலும் மோடி பங்கேற்கிறார். இந்தியத் தலைவர் ஒருவர் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும். பொருளாதாரத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் குறித்த மாநாடு இது.

கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை இந்த பயணத்தின்போது பிரதமர் சந்திக்கவுள்ளதால் இந்திய - கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த பயணம் குறித்து பிரதமர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாளையும், நாளை மறு நாளும் நான் சிங்கப்பூரில் இருப்பேன். ஆசியான் - இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவுள்ளேன். இதுதவிர பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன். கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. இது நமது நாட்டு மக்களுக்கு நல்லதை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.

English summary
PM Modi is leaving for Singapore tonight. He will be there for two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X