டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

36 மணி நேரம் குறுகிய கால சுற்றுப்பயணம்... ரஷ்யா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் (புதன் மற்றும் வியாழன்) ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து ரஷ்யாவிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கிழக்கு நகரமான விலாடிவிஸ்டோக் நகருக்கு (Vladivostok) புறப்பட்டு சென்றுள்ளார். 36 மணி நேரம் குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்தியா -ரஷ்யா இடையிலான 20-வது வருடாந்திர இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்.

PM Modi leaves for russia, focus on 20th India-Russia Summit

அத்துடன் அங்கு நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ரஷ்ய பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சிறப்பபான தனித்துவமான ஒத்துழைப்பு காரணமாக வலுவான அடித்தளம் உள்ளதால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே சிறந்த உறவு உள்ளது.

நல்லதொரு பலமான உலகத்தை ஊக்குவிக்கும் விருப்பத்தால் வலுவான கூட்டணி இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ளது. மேலும் அதற்கான பிராந்திய மற்றும் பன்முகத்தன்மை உள்ளதால் இந்தியா ரஷ்யா இடையே நெருக்கமான ஒத்துழைப்பு காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

English summary
PM Modi leaves for russia, focus on 20th India-Russia Summit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X