டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் ஜிப்பா அணிந்து தீபம் ஏற்றிய பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி : தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் ஜிப்பாவில் தீபம் ஏற்றி மனம் உருக பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

Recommended Video

    நாடு முழுவதும் களைகட்டிய ஒற்றுமை தீபம்... பிரபலங்களும், தலைவர்களும் விளக்கேற்றினர்

    பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட வீடியோவில் , " பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்

     PM Modi lights out and lighting in delhi

    மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு, வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (5ம் தேதி) இரவு 9 மணி அளவில் நாடு முழுவதும் மக்கள் அகல் தீபம் ஏற்றினர். செல்போனில் டார்ச் அடித்து கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள் என பலரும் அகல் தீபம் ஏற்றுதல், மெழுகுவர்த்தி ஏற்றுதல் , செல்போனில் டார்ச் லைட் அடித்தல் போன்ற செயல்களை செய்து கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    விளக்கேற்றுவதால் பயனில்லை.. மக்களுக்கு தேவையானதை செய்யுங்க மோடி.. நாராயணசாமி விளக்கேற்றுவதால் பயனில்லை.. மக்களுக்கு தேவையானதை செய்யுங்க மோடி.. நாராயணசாமி

    இந்நிலையில் ஊரையே விளக்கு ஏற்ற சொன்ன பிரதமர் மோடி, அவரும் தமிழர்களின பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் ஜிப்பா அணிந்தபடி தீபம் ஏற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். இந்த படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    PM Modi's 9 pm, 9 minute appeal: PM Modi lights out and lighting in delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X