டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவூதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசார் விவகாரத்தில்தெளிவான முடிவு எடுத்த சவூதி- வீடியோ

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்து சவூதி அரேபியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின்போது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். முதலீட்டாளர் மாநாடு ஒன்றிலும் கலந்து கொள்வார்.

    இந்த முதலீட்டாளர் மாநாடு ரியாத் நகரில் நடைபெறவுள்ளது. இருப்பினும் பிரதமரின் சவூதி பயணம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சவூதி சென்றிருந்தார். பிரதமர் பயணத்திற்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் பிரதமர் சவூதி செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    PM Modi may visit Saudi by this month end

    சவூதி அரசுடன், பல்வேறு விஷயங்கள் குறித்து தோவல் விவாதித்தார். குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப் பிரிவு ரத்து, பாகிஸ்தானின் அட்டகாசம் உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாகப் பேசியதாக தெரிகிறது. காஷ்மீருக்கான சட்டப் பிரிவு ரத்து தொடர்பாக சவூதி அரசும், இந்தியாவுக்கு ஆதரவான கருத்தையே வெளிப்படுத்தியுள்ளது.

    இந்தப் பின்னணியில்தான் சவூதி செல்லவுள்ளார் பிரதமர். மோடி, சவூதிக்கு இதற்கு முன்பு 2016ம் ஆண்டு சென்றுள்ளார். அதன் பிறகு 2வது முறையாக மீண்டும் செல்லவுள்ளார். அவரது முதல் பயணத்தின்போது சவூதி அரசின் உயரிய சிவில் விருதான அப்துல் அஜீஸ் செளத் விருது பிரதமருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Sources say that PM Narendra Modi may visit Saudi Arabia by this month End.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X