டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சுதந்திரம் குறித்து எனது யோசனை'.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திரம் என்பது குறித்து தனது யோசனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்த வேண்டும் என்றார்.

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, பேச ஆரம்பிக்கும் போது நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று கூறி பேசினார்,

pm modi mention which is freedom at independence day speech

அப்போது அவர் முத்தலாக் மசோதா, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து நீண்ட விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து சுதந்திரம் குறித்த தனது யோசனை இது தான் என்று கூறி சில விஷயஙகளை பேசினார்.

இனி அவர்தான் அதீத சக்தி வாய்ந்தவர்.. முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரி.. மத்திய அரசின் மாஸ்டர் பிளான்! இனி அவர்தான் அதீத சக்தி வாய்ந்தவர்.. முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரி.. மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!

சுதந்திரம் என்பது குறித்து எனது யோசனை என்னவென்றால், மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசாங்கம் மெதுவாக வெளியேற வேண்டும். மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்த வேண்டும். மக்களின் வாழ்வில் அரசின் எந்த குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதிக தேவையின் போது மட்டுமே அரசு செயல்படவேண்டும் என்றார்.

பொருளாதாரம் குறித்து பேசிய மோடி, கடந்த 70 வருடங்களில் 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்குப் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம் என்றும் கூறினார். வருங்காலத்தில் இதை ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் கூறினார்.

English summary
pm modi independence day speech, he mention which is freedom to people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X