டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன் கி பாத்.. கிராமத்துக்கு திரும்பு.. பிரதமர் மோடியை நெகிழ வைத்த காஷ்மீர் இளைஞரின் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய மனதின் குரல் உரையில் (மான் கி பாத்) காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் எழுதிய கிராமத்துக்கு திரும்புங்கள் என்ற திட்டம் குறித்து நெகிழ்ச்சியுன் பேசினார். அத்துடன் பண்டிகை மற்றும் விழா காலங்களில் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தினார்

நரேந்திர மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பதிவியேற்ற பின்னர், தற்போது இரண்டாவது முறையாக மான் கி பாத் உரையாற்றி உள்ளார். அதாவது மனதின் குரல் உரையாற்றி உள்ளார். இந்த உரையில் அவர் பேசிய முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

"நீங்கள் அனைவரும் படித்த புத்தகங்களை 'நரேந்திர மோடி மொபைல் ஆப்பில்' பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எனது வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் எதை படிக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே பகிரவும் செய்வோம்.

ஹரியானாவின் முயற்சி

ஹரியானாவின் முயற்சி

ஜார்கண்ட் மக்கள் நீர் பாதுகாப்பை நோக்கி பாராட்டத்தக்க முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள். சொந்த நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா மாறியுள்ளது. அதேபோல் ஹரியானாவில் மிகக் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்கள் ஊக்குவிக்கிறது. இதனால் விவசாயிகள் இழப்புகளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். நீரை பாதுகாக்க நம் சமூகம் முயற்சித்து வருகிறது. இதன் மூலம் தண்ணீரை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வில் நல்ல அறிகுறி தென்படுகிறது.

நீர் விழிப்புணர்வு அவசியம்

நீர் விழிப்புணர்வு அவசியம்

பண்டிகை காலம் தொடங்கிவிட்டது, பண்டிகை காலத்தில் பல விழாக்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. நீர் பாதுகாப்பிற்காக நாம் ஏன் இந்த விழாக்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது திருவிழாக்களில் நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மை கௌட் இந்தியா இணையதளத்தில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அஸ்லாம் என்பவர் எனக்கு அனுப்பிய மெசேஜை படித்தேன். அதன் பிறகு கிராமத்திற்கு திரும்பு திட்டத்தை பற்றி மேலும் அறிய ஆர்வமாக மாறினேன். அந்த திட்டத்தின் நீளம் எப்படி இருக்கும் என்பதை அறிந்த உடன், இந்த திட்டத்தினை பற்றி ஒட்டுமொத்த தேசமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.

காஷ்மீர் இளைஞர்

காஷ்மீர் இளைஞர்

கிராமத்திற்கு திரும்பு என்ற திட்டம் என்பது அரசு அதிகாரிகள் கிராமத்தில் சுற்றிவிட்டு மீண்டும் அரசு அலுவலகத்துக்கு திரும்புவது அல்ல. இதற்கு பதில்க அதிகாரிகள் இரண்டு நாள்கள் மற்றும் ஒரு இரவை அந்த கிராம பஞ்சாயத்தில் கழிக்க வேண்டும். அதன் மூலம் கிராம மக்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். இதன் மூலம் கிராமத்தில் அரசின் திட்டங்களின் பயன்களை கொண்டு சேர்க்க வேண்டும்.

என்னை கவர்ந்துவிட்டது

என்னை கவர்ந்துவிட்டது

'கிராமத்துக்கு திரும்பு' என்ற திட்டம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இந்த திட்டத்தின் படி, தொலைத்தூர மலை கிராமங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒன்றரை நாள் கால்நடையாகக அதிகாரிகள் கால் நடையாக அதிகாரிகள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த கிராமங்களிலும் கிராமத்துக்கு திரும்பு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காஷ்மீர் மக்கள் நம்பிக்கை

காஷ்மீர் மக்கள் நம்பிக்கை

இதுபோன்ற கிராமத்துக்கு திரும்பு போன்ற திட்டங்களில் காஷ்மீர் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது அங்குள்ள நமது சகோதர சகோரிகள் நல்லாட்சியை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. தோட்டாக்கள், குண்டுகள் ஆகியவற்றின் வலிமையைவிட வளர்ச்சியின் சக்தி வலிமையானது என்பது நிரூபணம் ஆகிறது. புதுமைகளை ஆராய்வதில் நம் விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான்-2 மூலம் நிரூபித்துள்ளார்கள் " இவ்வாறு கூறினார்.

English summary
pm modi on Mann Ki Baat, 'Back to village' programme is my heartening aspect, written massage by kashmiri youth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X