டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மான் கி பாத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யாவை புகழ்ந்த மோடி.. வில்லுப்பாட்டு கலை குறித்து பெருமிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருகிறார் என்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு யோசனை தெரிவித்தார். தமிழ்நாட்டில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் அந்த மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பேசுவார். அப்போது நாட்டு மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைப்பார்.

அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி

கிராமங்களின் கதை

கிராமங்களின் கதை

அப்போது அவர் பேசுகையில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு கதைகள் சொல்லி மகிழலாம். கொரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது; நமது கிராமங்களின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

 தமிழக கதை

தமிழக கதை

நம் நாட்டில் பலவகையான நாட்டுப்புறக் கலைகள் இருக்கின்றன; தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது; இதை வில்லுப்பாட்டு என அழைக்கிறோம்; இதில் கதைகளும், இசையும் என்ற மிகக் கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருகிறார்.

 பஞ்ச தந்திர கதைகள்

பஞ்ச தந்திர கதைகள்

கதைகளின் வரலாறு மனித நாகரிகத்தைப் போலவே பழமையானது. 'ஒரு ஆன்மா இருக்கும் இடத்தில், ஒரு கதை இருக்கிறது' .... இந்தியாவில், கதை சொல்லும் பாரம்பரிய மரபு உள்ளது. கதை சொல்வது என்பது மிகவும் அற்புதமான கலை. பஞ்ச தந்திர கதைகள் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்துகின்றன.

கதை சொல்பவர்களுக்கு கோரிக்கை

கதை சொல்பவர்களுக்கு கோரிக்கை

சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாடப் போவதால் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலிருந்து அனைத்து உத்வேகம் தரும் கதைகளையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கதைசொல்லிகளையும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக 1857 மற்றும் 1947 க்கு இடையில் நடந்த நிகழ்வுகளை. எங்கள் புதிய தலைமுறைகளுக்கு கதை சொல்லிகள், கதைகளின் வடிவத்தில் அறிமுகப்படுத்தலாம்" என்றார்.

English summary
I urge all storytellers to include all inspirational stories from the period of foreign rule as we are going to celebrate 75 years of independence. Especially between 1857 & 1947. We can introduce our new generation to them in form of stories: PM Modi on Mann Ki Baat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X