டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நமது ராணுவ வீரர்களின் தைரியத்தை உலகம் கண்டது.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து நினைவு கூர்ந்த மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நேரத்தில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய தாக்குதல்) நடத்திய போது நமது ராணுவ வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் வீரம் ஆகியவற்றை உலகம் கண்டது" என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்.

2016 செப்டம்பர் 18ல் ஜெயஷ் இ முகம்மது தீவிரவாதிகள் அதிகாலையில் ராணுவ உடையில் வந்து காஷ்மீரில் உள்ள உரி ராணுவதளத்தின் மீது நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

PM Modi on Mann Ki Baat: he says Four years ago, bravery and valour of our soldiers during surgical strike

இதற்கு பதிலடியாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, 7 தீவிரவாத முகாமை அழித்தனர். இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அப்போது தகவல் வெளியானது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை நடந்து முடிந்தது.. இது போன்ற அட்டாக்கை Surgical Strike (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்று மத்திய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாத கடைசி ஞாயிறு அன்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் அந்த மாதத்தில் நடந்த சிறப்பு மிகுந்த சம்பவங்களை கூறுவார். அந்த வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றியும் இன்று கூறினார்,

கதை சொல்வது அற்புதமான கலை.. தமிழக வில்லுப்பாட்டு கலை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் கதை சொல்வது அற்புதமான கலை.. தமிழக வில்லுப்பாட்டு கலை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இதுபற்றி பிரதமர் மோடி பேசுகையில் "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நேரத்தில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய தாக்குதல்) நடத்திய போது நமது ராணுவ வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் வீரம் ஆகியவற்றை உலகம் கண்டது.

விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி

எந்த விலை கொடுத்தேனும் தாய் நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் காப்பதே எங்கள் துணிச்சலான வீரர்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள் ஆக இருந்தது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

English summary
Four years ago, around this time, the world witnessed the courage, bravery and valour of our soldiers during surgical strike. Our brave soldiers had just one mission and goal—to protect the glory and honour of mother India at any cost: PM Modi on Mann Ki Baat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X