டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெரிகுட் பிரிவில் சத்தியமங்கலம்.. மிகச் சிறந்த புலிகள் காப்பகம்.. பிரதமர் மோடி அளித்த விருது

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே புலிகள் வாழ்வதற்கு மேம்பட்ட வனம் என்றால் அது சத்தியமங்கலம் என்று கூறி அதற்கான விருதினை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

மனிதர்கள் வனங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்த காரணத்தால், மனிதன் விலங்குகள் இடையே மோதல் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆறு அறிவு உடைய மனிதன், 5 அறிவுடைய விலங்குளின் இருப்பிடத்திற்க ஆசைப்பட்டு அவைகளை அழித்துவருகிறான்.

 அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

இப்படி மனிதர்களால் பெரிய அளவில் அளிக்கப்பட்ட உயிரினம் என்றால் புலிகள் தான். இதன் காரணமாக புலிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே பெரிய அளவில் சரிந்தது. இதனால் புலி அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது.

வனச்சூழலை பாதுகாக்க

புலிகள் வசிக்கும் ஒவ்வொரு வனப்பகுதியையும் மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. ஏனெனில் புலிகளை காப்பாற்றினால் தான் வனத்தையும், வனச்சூழலையும், அங்குவாழும் உயிரினங்களின் உணவு சங்கிலையும் பாதுகாக்க முடியும்.

 மோடி விருது வழங்கினார்

மோடி விருது வழங்கினார்

இதற்காக ஆண்டுதோறும் ஜூலை 29ம தேதி(இன்று) சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். புலிகள் காப்பகங்களுக்கான சிறந்த விருதை மோடி வழங்கினார். அப்போது சிறந்த பரிணாம வளர்ச்சி கொண்ட திறன்மேலாண்மையுடன் நிர்வகிக்கப்படும் வனப்பகுதிக்கான விருதை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வழங்கினார்.

 புலிகளின் எண்ணிக்கை

புலிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் 2014-ல் 1400 என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக அதிகரித்தது உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்த 3000 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர காண்டில் 340 புலிகள் இருக்கிறது. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் இரண்டாவது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு வனத் துறை எடுத்த கணக்கெடுப்பில் 250-ஐ தாண்டியுள்ளது.

English summary
pm modi presents the award to Sathyamanglam Tiger Reserve, for showing the highest increment in the quadrennial Management Effective Evaluation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X