டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.

பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி ரேடார் தொழில்நுட்பம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தனது பேச்சில், பாகிஸ்தான் பாலக்கோடு தாக்குதல் திட்டமிடப்பட்ட அன்று நான் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் வானிலை திடீர் என்று மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை.

மேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை! மேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை!

வானிலை மோசம்

வானிலை மோசம்

அங்கு நிறைய கரு மேகம் இருந்தது. அதிகாரிகள் என்னிடம் ஆபரேஷனை தள்ளி வைக்கலாமா என்று கேட்டார்கள். தற்போது நிறைய மேகம் இருக்கிறது. இது விமானத்தை மறைக்கும், அதனால் இந்திய விமானப்படை ரேடாரில் இருந்து தப்பிக்க முடியும். இது இந்திய விமானப்படைக்கு உதவும். அதனால் ஓகே, சென்று தாக்குங்கள், மேகம் நம்மை காப்பற்றும், என்று குறிப்பிட்டேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

பலர் கிண்டல்

பலர் கிண்டல்

இந்த நிலையில் மோடியின் இந்த பேச்சு இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் மோடியை கிண்டல் செய்து வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது தவறு என்று கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்று இரவில் இருந்து இந்த ரேடார் விஷயம்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்.

பாலக்கோடு தாக்குதல்

பாலக்கோடு தாக்குதலுக்கு முன் பிரதமர் மோடி மேகங்களை ஆராய்ச்சி செய்யும் அரிய புகைப்படம் என்று இவர் கிண்டல் செய்து இருக்கிறார்.

நிலாவில் திட்டம்

இஸ்ரோ: நாங்கள் நிலவிற்கு செயற்கைகோள் அனுப்ப போகிறோம்.

மோடி: அப்படி என்றால் பௌர்ணமி அன்று அனுப்புங்கள். அப்போதுதான் தரையிறங்க வசதியாக இருக்கும், என்று மோடியை கிண்டல் செய்துள்ளார்.

டெலிட் செய்துவிட்டனர்

பிரதமர் மோடியின் ரேடார் கருத்தோடு பாஜகவிற்கும் ஏற்பில்லை போல. அவர்கள் செய்த டிவிட்டையே டெலிட் செய்துவிட்டார்கள், என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.

இதுதான் காரணம்

நீரவ் மோடி, மல்லையா, மெஹுல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறிய போதும் இதேபோல மேகம் இருந்ததால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை போல, என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.

English summary
PM Modi' radar's speech on Balakot attack becomes viral in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X