டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மறமானம் மாண்ட.." லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கில் இன்று ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளை உதாரணம் காட்டி பேசியது கவனிக்கத் தக்கதாக அமைந்தது.

Recommended Video

    India China Border | Modi in Leh Boost to Soldiers

    லடாக்கின் நிம்மு பகுதியில், ராணுவ வீரர்கள் மத்தியில் இன்று பிற்பகல் 2 மணியளவில், மோடி உரையாற்றினார். தனது உரையின் இறுதி பகுதியில், அவர் கிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ள சுதர்சன சக்கரத்தை குறிப்பிட்டார். புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணர்தான், சுதர்சன சக்கரம் வைத்திருந்தார். எனவே அமைதியையும், ஆக்ரோஷத்தையும் இந்தியா எப்போதுமே இரு கண்களாக பாவிக்க கூடியது என்றார் மோடி.

    PM Modi refers Thirukkural at his speech in Ladakh

    இதையடுத்து, படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றை அவர் குறிப்பிட்டார். "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு" என்ற திருக்குறளை அவர் உச்சரித்தார். பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார்.

    அமைதியை விரும்புகிறோம்.. அத்துமீறினால் விட மாட்டோம்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி எழுச்சி உரைஅமைதியை விரும்புகிறோம்.. அத்துமீறினால் விட மாட்டோம்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி எழுச்சி உரை

    "வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்." என்று இதற்கு மு.வரதராசன் தெளிவுரை எழுதியுள்ளார்.

    கிருஷ்ணர் மற்றும் திருக்குறள் ஆகிய இரு உதாரணங்களை தனது பேச்சின்போது அவர் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Modi refers Thirukural at his speech in Ladakh before army men.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X