டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் முடிவுகள்.. கருத்து சொல்ல மோடி மறுப்பு.. முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து சொல்ல பிரதமர் மோடி மறுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓய்ந்தது மோடி அலை... கலக்கத்தில் பாஜக!- வீடியோ

    டெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்ல பிரதமர் மோடி மறுத்துவிட்டார். முக்கியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலையில் வாக்கு எண்ண ஆரம்பித்த உடனேயே பாஜக, காங்கிரஸ் வெற்றி நிலவரம் தெரிய ஆரம்பித்து விட்டது.

    சில மாநிலங்களில் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் முந்திக் கொண்டு மேலே வந்துவிட்டது. ம.பி., ராஜஸ்தானில்தான் காங்கிரசும், பாஜகவும் நீயா நானா போட்டி போட்டு கொண்டு இழுபறியை உண்டாக்கி வருகிறார்கள்.

    நீயா நானா

    நீயா நானா

    இதில் ராஜஸ்தானில் நிலைமை ஓரளவு முடிவாகி விட்டது. ஆனால் ம.பியில் இழுபறி தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது உறுதியாகி விட்டது.

    முக்கிய விவாதங்கள்

    முக்கிய விவாதங்கள்

    இந்த நிலையில்தான் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மோடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல முக்கியமான பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    மோடி மறுப்பு

    மோடி மறுப்பு

    அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதம் நடத்தப்படும்" என்றார். உடனே செய்தியாளர்கள், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கேட்டனர். அதற்கு பிரதமர், எந்தவித கருத்தையும் கூற மறுத்துவிட்டார்.

    அமித்ஷா

    அமித்ஷா

    இதற்கிடையே தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

    English summary
    Five State Elections Counting Today. But PM Modi refused to Comment on Poll results
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X