டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இமாலய வெற்றி பெற்ற பாஜக.. வாழ்த்து சொன்ன ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி சொன்ன பதில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தனிப்பெரும்பான்மையுடன் 2-ம் முறை பிரதமராகிறார் நரேந்திர மோடி.. விஜயகாந்த் வாழ்த்து!- வீடியோ

    டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து வாழ்த்து கூறிய ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

    நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் கோட்டை என கூறப்பட்ட பல தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது பாஜக.

    மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன? களத் தகவல் இதுதான் ஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன? களத் தகவல் இதுதான்

    வாழ்த்து கூறிய ராகுல்

    மக்களின் தீர்ப்பை ஏற்பதாகவும் வெற்றி பெற்றவர்களுக்கும் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்து என கூறியிருந்தார் ராகுல்காந்தி. மேலும் வயநாட்டில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் அமேதி தொகுதி மக்களுக்கும் நன்றி பிரச்சாரத்தின் போது கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி என கூறியிருந்தார் ராகுல்.

    பிரதமர் பதில்

    இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ராகுல்காந்தியின் ட்விட்டுக்கும் பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி ராகுல்காந்தி என குறிப்பிட்டுள்ளார்.

    ட்ரம்ப் வாழ்த்து

    இதேபோல் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து கூறியிருந்தார். அதில், தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும வாழ்த்துகள் என்றும் உங்களுடன் இணைந்து முக்கிய பணிகளை செய்ய எதிர்பார்த்திருக்கேன் என்றும் கூறியிருந்தார்.

    ட்ரம்புக்கு மோடி நன்றி

    வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். அதில் இந்த வெற்றி நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் ஆசாபாசங்களை காட்டுகிறது. நானும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அது உலகளாவிய சமாதானத்தையும் வளத்தையும் பெருக்கும் என்று மோடி தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Modi replies to leaders for the greetings on Twitter. Modi replied to Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X