டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலாவிடம் ஒரே ஒரு பழைய ஸ்கூட்டர்தான் இருக்காம்.. அமித்ஷா சொத்து மதிப்பு சரிவு.. மோடிக்கு சூப்பர்!

பிரதமரின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பானது கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாம். அதேசமயம், அமித் ஷாவின் சொத்து மதிப்பில் லேசான சரிவு காணப்படுகிறதாம். இதை பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் சொத்து மதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணமே அவர் வங்கிகளில் செய்திருந்த முதலீடுகளும், அந்த முதலீடுகள் மீது அவருக்கு கிடைத்த ரிட்டர்ன்களுமே காரணம். அதேசமயம், பங்குச் சந்தை சூழல் சரியில்லாமல் போனதால் அமித் ஷாவின் சொத்து மதிப்பு லேசான சரிவைச் சந்தித்துள்ளதாம்.

தங்களது சொத்து விவரங்கள், அதன் மதிப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில்தான் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள்ளன.

மக்கள் ஜனாதிபதி கலாம் ஜெயந்தி... ட்விட்டரில் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரதமர், அமைச்சர்கள் மக்கள் ஜனாதிபதி கலாம் ஜெயந்தி... ட்விட்டரில் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரதமர், அமைச்சர்கள்

 பிரதமர்

பிரதமர்

முதலில் பிரதமரின் சொத்து மதிப்பை பார்ப்போம்... 2020 ஜூன் மாத நிலவரப்படி நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ. 2.85 கோடியாக உள்ளது.. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 2.49 கோடியாக இருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 36 லட்சம் அதிகரித்துள்ளது. வங்கி முதலீடுகள் மூலம் ரூ. 3.3 லட்சம் உயர்வையும், முதலீடுகள் மீதான ரிட்டர்ன்கள் மூலம் ரூ. 33 லட்சம் உயர்வையும் மோடி கண்டுள்ளார்.

 நிலுவை

நிலுவை

ஜூன் மாத கடைசி நாள் நிலவரப்படி பிரதமரின் கையிருப்பு ரூ. 31, 450 ரொக்கமாக இருந்தது. வங்கியில் நிலுவையாக 3,38,173 இருந்தது. அது காந்தி நகர் ஸ்டேட் பாங்க் கணக்கில் உள்ளது. என்எஸ்சி எனப்படும் தேசிய சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பிரதமரிடம் ரூ. 8,43,124 தொகை உள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலமாக ரூ. 1,50.957 சேர்த்து வைத்துள்ளார். வரி சேமிப்பு இன்பிரா பாண்டுகள் மூலம் ரூ. 20,000 வைத்துள்ளார். பிரதமரின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1.75 ஸோடியை விட கொஞ்சம் கூடுதலாக உள்ளது.

 பெரிய சொத்து

பெரிய சொத்து

எந்த வங்கியிலும் பிரதமர் கடன் வாங்கவில்லை. அவருக்கென்று சொந்தமாக அவரது பெயரில் எந்த வாகனமும் இல்லை. அவரிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அவற்றின் எடை 45 கிராம்தான். அதன் மதிப்பு என்று பார்த்தால் ரூ. 1.5 லட்சமாகும். இவ்வளவுதான் பிரதமரிடம் உள்ள பெரிய சொத்துக்கள்.

 காந்தி நகர்

காந்தி நகர்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமரின் பெயரில் ஜாயின்ட் ஓனர் என்ற முறையில் ஒரு பிளாட் உள்ளது. அதன் அளவு 3531 சதுர அடியாகும். இதற்கு மோடி மட்டும் உரிமையாளர் கிடையாது. மொத்தம் 4 பேருக்கு சொந்தமானது.. அதில் பிரதமரின் பங்கு என்பது 25 சதவீதம் மட்டுமே. இந்த சொத்தானது 2002ம் ஆண்டு 25ம் தேதி வாங்கப்பட்டது.. அதாவது குஜராத் முதல்வராக அவர் பொறுப்பேற்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளனர். அப்போது சொத்து மதிப்பு ரூ. 1.3 லட்சத்திற்கும் கொஞ்சம் கூடுதலாக மட்டுமே இருந்தது.

அமித்ஷா

அமித்ஷா

அடுத்து அமித் ஷா கணக்குக்கு வருவோம். அமித் ஷாவிடம் தற்போது உள்ள சொத்து மதிப்பு ரூ. 28.63 கோடியாகும். கடந்த வருடம் இது 32.3 கோடியாக இருந்தது. தற்போது குறைந்து விட்டது. அவரிடம் குஜராத்தில் 10 அசையா சொத்துக்கள் உள்ளன. அவரது தாய் வழி வந்த சொத்துக்களும் இதில் அடக்கமாகும். மொத்த மதிப்பு ரூ. 13.56 கோடியாகும்... அமித்ஷாவின் கையிருப்பு ரொக்கத்தின் அளவு ரூ. 15,814 மட்டுமே.

 ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து கடந்த ஆண்டில் இரு்நதது போலவே உள்ளது. பெரிதாக மாற்றம் இல்லை... அவரிடம் அசையும் சொத்துக்கள் ரூ. 1.97 கோடி என்ற அளவிலும், அசையா சொத்துக்கள் ரூ. 2.97 கோடி என்ற அளவிலும் உள்ளன. ராஜ்நாத் சிங்கிடம் 2 துப்பாக்கிகள் உள்ளனவாம்.. அவரது மனைவி சாவித்திரியின் சொத்து மதிப்பு ரூ. 54.41 லட்சமாகும்.

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இதேபோல பிற மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்புகளும் பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டியது நிர்மலா சீதாராமன்தான். இதுவரை இருந்த நிதியமைச்சர்களை விட மிகக் குறைந்த சொத்து கொண்டவர் நிர்மலாதான். இவரும் இவரது கணவரும் சேர்ந்து வைத்துள்ள வீடு ஒன்றின் மதிப்பு ரூ. 99.36 லட்சமாகும்... இதுதவிர விவசாயம் அல்லாத நிலங்களின் மதிப்பு ரூ. 16.02 லட்சமாகும்.

 ஸ்கூட்டர்

ஸ்கூட்டர்

நிர்மலாவிடம் சொந்தமாக கார் ஏதும் இல்லை. ஒரே ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் மட்டுமே உள்ளது. அதன் விலை ரூ. 28,200 மட்டுமே.. ஆந்திர மாநிலப் பதிவெண் கொண்ட வாகனம் இது.. இவர் வீட்டுக் கடன் வாங்கி அதற்கு கட்டி வருகிறார்.. அது 19 வருட கடனாகும். ஒரு வருட ஓவர்டிராப்ட் பெற்றுள்ளார்.. 10 வருட மார்ட்கேஜ் லோனும் வாங்கியுள்ளார்... அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 18.4 லட்சமாகும்.

English summary
PM Modi richer than last year, Amit Shah’s net worth takes a hit: PMO
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X