டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1971ல் இந்திரகாந்திக்கு பிறகு சாதித்த மோடி.. 48 வருடத்துக்குபின் பாஜக வரலாற்று வெற்றி

Google Oneindia Tamil News

டெல்லி: 1971ம் ஆண்டு இந்திராகாந்திக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தான் 303 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

2014ம் ஆண்டு தேர்தலைவிட 2019ம் ஆண்டு தேர்தல் பாஜகவினருக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். காரணம் அப்போது 282 இடங்களில் தான் வென்று இருந்தது. ஆனால் இப்போது அதை விட அதிமாக, அதாவது 303 இடங்களில் வென்று உள்ளது.

pm modis bjp get 48 years historical victory after indira gandhi cross 300 seats since 1971

மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானில் கடந்த டிசம்பரில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பாஜக இந்த முறை சுதாரித்து சிறப்பாக செயல்பட்டதால் அங்கு காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய அளவில் வீழ்த்தி உள்ளது. இது மட்டுமின்றி, குஜராத், அரியானா, டெல்லியிலும் பாஜகவின் வெற்றி அசாத்தியமானது.

மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானாவிலும் வியக்க வைக்கும் வெற்றியினை பாஜக பெற்றுள்ளது. அத்தோடு உத்தரப்பிரதேசத்திலும் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியை முறியடித்து வென்றுள்ளது. மகாராஷ்டிராவிலும் மாயாஜால வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

ஆஹா... நரேந்திர மோடி சொன்னதையே... சொல்லும் ஜெகன்மோகன் ரெட்டி ஆஹா... நரேந்திர மோடி சொன்னதையே... சொல்லும் ஜெகன்மோகன் ரெட்டி

இதன் காரணமாக பாஜக 48 ஆண்டுகளில் இல்லாத அளவிலான (302 எம்பிக்கள்) ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அதாவது 1971ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 300 இடங்களுக்கு மேல் வென்று இருந்தது. அதன் பிறகு மோடி தலைமையினான பாஜக அரசு இப்படி ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இன்மை, அமித்ஷா மற்றும் மோடியின் பாஜகவின் வியூகங்கள் காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.

English summary
lok sabha elections result 2019: pm modi's bjp get 48 years historical victory after indira gandhi cross 300 seats since 1971
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X