டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசு திடீரென எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    டெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்ட பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மட்டுமல்ல இதுவரை திடீர் திடீர் என மூன்று முக்கிய முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தியது. ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட இந்த மூன்று முடிவுகளும் இந்தியாவை புரட்டி போட்டது. அவற்றை இப்போது பார்க்கலாம்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவு 370 ரத்து, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என மூன்று முக்கிய முடிவுகளை திடீர் திடீர் என ஒரே நாளில் அறிவித்து உள்ளது.

    இந்த மூன்று முடிவுகளுமே இந்திய மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை ஆகும்.

    5 வருடங்கள் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்தது5 வருடங்கள் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்தது

    பிரதமர் மோடி அறிவிப்பு

    பிரதமர் மோடி அறிவிப்பு

    பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த முடிவு நாட்டு மக்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் காரணமாக நாட்டில் அனைவரும் சுமார் 6 மாதங்கள் ஏடிஎம் வாசல் முன்பு நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    சிறப்பு அந்தஸ்து ரத்து

    சிறப்பு அந்தஸ்து ரத்து

    இரண்டாவது முடிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தான். இந்த அறிவிப்பு வெகு சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது. அதாவது கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் உள்துறை அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனை கேட்டு பக்கத்து நாடான பாகிஸ்தானே அதிர்ச்சி அடைந்துவிட்டது. மிக துணிச்சலான முடிவு என்று பல்வேறு கட்சிகள் பாராட்டி வருகின்றன.

    12 ஆக குறைந்த வங்கிகள்

    12 ஆக குறைந்த வங்கிகள்

    மூன்றாவது முடிவு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றியது தான். அதாங்க இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் மொத்தம் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாடு ஒன்றாக இணைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைத்துள்ளது.

    நாட்டு மக்கள் அதிர்ச்சி

    நாட்டு மக்கள் அதிர்ச்சி

    இந்த மூன்றுமே இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் ஆகும். குறிப்பாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 முக்கிய முடிகள் எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகட்டும், பொதுத்துறை வங்கி இணைப்பு ஆகட்டும் இரண்டுமே பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். கடுகளவும் வெளியே கசியாமல் சரியாக ஒரு நாளில் தான் மத்திய அரசு முடிவுகளை அறிவிப்பது ஏன் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

    English summary
    pm modi's govt 3 importnat decision taken with in a day, list out here. all three make big changes in india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X