டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்!

டெல்லியில் பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்து கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்து கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் தமயந்தி பென் மோடி. இவர் பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் என்பவரின் மகள் ஆவார். டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் இருக்கும் குஜராத்தி சமாஜ் பவன் பகுதியில் இவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அடிக்கடி குஜராத் மற்றும் டெல்லி இடையே சென்றது வருவது வழக்கம். இவரிடம்தான் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

என்ன ஆனது

என்ன ஆனது

நேற்று காலை இவர் அகமதாபாத்தில் இருந்து டெல்லி வந்துள்ளார். பின் டெல்லி ரயில்வே நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். கையில் பெரிய ஹேண்ட்பேக்குடன் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அப்போது பைக்கில் அந்த பகுதிக்கு வந்த இரண்டு பேர் வேகமாக அவரின் பையை இழுத்துள்ளனர். முதலில் அவர் பையை விடவில்லை. ஆனால் அவர்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டே, பையை பிடித்து இழுத்து பிடிங்கிவிட்டு, அங்கிருந்து மயமாகி உள்ளனர்.

எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

அந்த பையில் 56 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருந்துள்ளது. 2 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்துள்ளது. அதேபோல் அவர் பணி தொடர்பாக சில முக்கிய அரசு ஆவணங்கள் அதில் இடம்பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புகார் என்ன

புகார் என்ன

பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்தேகொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் உறவினருக்கு கூட இந்த நாட்டில், அதுவும் தலைநகரில் பாதுகாப்பு இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

English summary
PM Modi's niece robbed in Delhi: Rs. 56,000, 2 Cellphones gone in a minute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X