டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமரின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து நிருபேந்திர மிஸ்ரா விலகல்.. மோடி உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். மோடியின் கோரிக்கையை ஏற்று, இன்னும் இரு வாரங்கள் அந்த பதவியில் தொடருவார் என கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மோடி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோதிலிருந்து அவருடைய நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் நிருபேந்திர மிஸ்ரா.

"நிருபேந்திர மிஸ்ரா மிகச் சிறந்த அதிகாரிகளில் ஒருவர், அவர் பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தின் மீது மிகுந்த பிடிப்பைக் கொண்டவர். 2014 இல் நான் டெல்லிக்கு புதியவராக வந்தபோது, ​​அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார், அவருடைய வழிகாட்டுதல் மிகவும் மதிப்புமிக்கது" என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

PM Modis Principal Secretary Nripendra Misra quits

"பிரதமர் அலுவலகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியுடன் மற்றும் விடாமுயற்சியுடன் பணியாற்றிய பின்னர், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அழியாத பங்களிப்பைச் செய்தபின், நிருபேந்திர மிஸ்ரா தனது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" இவ்வாறு மற்றொரு ட்வீட்டில் மோடி தெரிவித்துள்ளார்.

PM Modis Principal Secretary Nripendra Misra quits

"பிரதமரின் முதன்மை செயலாளர் தனது பணியிலிருந்து விடுபட விருப்பம் தெரிவித்தார். பிரதமர் அவரை இரண்டு வாரங்கள் பதவியில் தொடருமாறு கோரியுள்ளார்" என்று அரசு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சரவை செயலாளர் ஆர்.கே. சின்ஹா பிரதமர் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
Nripendra Misra, one of Prime Minister Narendra Modi's closest aides and a member of his team since he came to power in 2014, has quit as Principal Secretary to the PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X