டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ஆர்சி குறித்த அமித் ஷாவின் கருத்தை பிரதமர் மோடி மறைக்க பார்க்கிறார்.. ப சிதம்பரம் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக அமித் ஷா கூறியதை பிரதமர் நரேந்திர மோடி மறைக்க பார்க்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடநத் மெகா பேரணியில் உரையாற்றிய போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தணிக்கும் விதமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அது தொடர்பாக ஒருபோதும் கலந்துரையாடப்படவிலலை என்றார்.

 PM Modis statements on NRC is an effort to cover up what Amit Shah statements: P Chidambaram

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மற்ற அமைச்சர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக கூறியிருந்தார்கள்.

அதை மறுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் எழுத்து பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இந்த வார்த்தை இதயத்தில் இருந்து வந்ததாக பார்க்க முடியும் என்றார்.

ஜார்க்கண்ட் தோல்விக்கு பின்.. இரண்டே வருடத்தில் பாஜக இழந்த மாநிலங்கள்ஜார்க்கண்ட் தோல்விக்கு பின்.. இரண்டே வருடத்தில் பாஜக இழந்த மாநிலங்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி சென்னையில் குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் இன்று பேரணி நடத்தியது. இந்த பேரணியில் பங்கேற்ற ப சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்களை மறைக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனா உண்மையில் பாஜக பின் வாங்கவில்லை. இதயபூர்வமாக இந்த மாற்றம் வரவில்லை. முழுமையாக எழுத்து பூர்வமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும்ட எங்கள் அரசு செய்யாது என்று பிரதமர் மோடி அறிவித்தால் மட்டுமே இதயப்பூர்வமான மாற்றமான மாற்றமாக இருக்கும்" என்றார்.

English summary
P Chidambaram said that Prime Minister Narendra Modi's statements on NRC is an effort to cover up what Home Minister Amit Shah and other ministers in his cabinet had said before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X