டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்ன? வேட்புமனுத்தாக்கலில் அளித்துள்ள விவரம் இதுதான்!

பிரதமர் மோடி தான் குஜராத் பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றதாக வேட்புமனுத்தாக்கலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi files nomination 2019 | சொத்து மதிப்பை வெளியிட்டார் மோடி

    டெல்லி: பிரதமர் மோடி தான் குஜராத் பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றதாக வேட்புமனுத்தாக்கலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    PM Modi says He has Master degree in arts in Gujarat Univ, in his affidavit

    இதற்காக நேற்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார். வேட்புமனுவுடன் அவர் தனது சொத்து மதிப்பு, கல்வித்தகுதி தொடர்பான விவரங்கள் அடங்கிய பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்தார்.

    நம்பித்தான் ஆகணும்.. மோடி கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே.. மொத்த சொத்தும் ரூ. 3 கோடிக்குள்தான்! நம்பித்தான் ஆகணும்.. மோடி கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே.. மொத்த சொத்தும் ரூ. 3 கோடிக்குள்தான்!

    அதன்படி தனக்கு அசையும் சொத்து - ரூ. 1.41 கோடி, அசையா சொத்து - ரூ. 1.10 கோடி உள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

    தன்னுடைய கல்வித்தகுதியாக டெல்லி பல்கலை.யில் இளங்கலை பட்டம் பெற்றதாக கூறியுள்ளார். 1978ல் இங்கிருந்து படித்து முடித்ததாக கூறியுள்ளார். அதேபோல் குஜராத் பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றதாக கூறியுள்ளார். 1983ல் இங்கு இவர் படித்து முடித்துள்ளார்.

    ஏற்கனவே மோடியின் இளங்கலை பட்டம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. அவரின் இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையில் படிக்கவில்லை என்று புகார் உள்ளது. இந்த நிலையில் மோடி முதுகலை பட்டம் படித்தாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த பிரமாணபத்திரம் நிறைய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    PM Modi says He has Master degree in arts in Gujarat Univ, in his candidate nomination affidavit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X