டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை!

Google Oneindia Tamil News

டெல்லி: பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி தெரிவித்த விஷயங்கள் சில சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் முகமது தீவிரவாதிகளின், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமான இந்திய விமானப்படை, பாகிஸ்தானில் பாலக்கோடு தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி நியூஸ் நேஷன் என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளார். இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று அவர் விளக்கி உள்ளார்.

நான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்? நான் எல்லாம் இப்படி பேச மாட்டேன்.. மோடியை கிண்டல் செய்யும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது பாஜகவில்?

வானிலை மோசம்

வானிலை மோசம்

ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை. அப்போது 12 மணி இருக்கும் . நிறைய கரு மேகம் இருந்தது. இந்த ஆபரேஷனை செய்ய முடியுமா என்று நாங்கள் நினைத்தோம். இதில் விமானத்தை ஓட்ட முடியுமா என்று நினைத்தோம். அதிகாரிகள் என்னிடம் ஆபரேஷனை தள்ளி வைக்கலாமா என்று கேட்டார்கள்.

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை

எனக்கு இரண்டு விஷயம் தோன்றியது. இதை தள்ளி வைத்தால், ரகசியம் கசிய வாய்ப்புள்ளது. இன்னொரு விஷயம், தற்போது நிறைய மேகம் இருக்கிறது, மழை பெய்கிறது. இது விமானத்தை மறைக்கும், அதனால் இந்திய விமானப்படை ரேடாரில் இருந்து தப்பிக்க முடியும்.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

இது இந்திய விமானப்படைக்கு உதவும். எல்லோரும் குழம்பிப் போய் இருந்தார்கள். நான்தான் ஓகே சென்று தாக்குங்கள், மேகம் நம்மை காப்பற்றும், என்று குறிப்பிட்டேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார் . பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரிய விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.

மோடி இல்லை

மோடி இல்லை

பொதுவாக ரேடார்கள் எத்தனை மழை, புயல், மேகம் இருந்தால் விமானங்களை துல்லியமாக கணிக்கும். மேகங்கள் அதை தடுக்க முடியாது. ஆனால் மோடி அது தெரியாமல் பேசி, தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

English summary
In an interview, PM Modi says he preferred bad weather for the Balakot attack due to clouds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X