டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

New Education Policy: சிந்திக்க தூண்டும்...வேலை வாய்ப்பு அளிக்கும்...பிரதமர் மோடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை நாட்டுக்கு சொந்தமானது. அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. ஆனால், கல்வி கொள்கை அனைவருக்கும் சொந்தமானது. புதிய கல்விக் கொள்கையானது, படிப்பதற்குப் பதிலாக கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய கல்விக் கொள்கை குறித்து இன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் கலந்து கொண்டுள்ளார்.

PM Modi says new educational policy gives learning instead of studying

இதில் பிரதமர் மோடி பேசுகையில், ''நாட்டின் புதிய கல்விக் கொள்கை ஆத்மநிர்பர் பாரத்தின் கண்ணோட்டத்தையே மாற்றி அமைப்பதாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையானது நடைமுறை, செயல்திறன், விமர்சன பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கையில் பயிற்சி அடிப்படையிலான கல்வி அளிக்கப்படும். இதன் மூலம் நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்த கல்விக் கொள்கையை மாணவர்கள், ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாட்டின் விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றுவதற்கு கல்வி கொள்கை முக்கியமானது, ஆனால் அரசாங்கத்தின் தலையீடு, செல்வாக்கு இதில் குறைவாக இருக்க வேண்டும். பண்டைய காத்தில் இருந்தே இந்தியா கற்பித்தலுக்கான மையமாக இருந்து வருகிறது. 21ம் நூற்றாண்டின் பொருளாதாரம் அறிவு சார்ந்த கல்விக்கான மையமாக இந்தியாவை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.

புதிய கல்விக் கொள்கையால் இந்தியாவில் சிறந்த சர்வதேச நிறுவனங்கள் தங்களது வளாகத்தைத் திறக்க வழி ஏற்படுத்துகிறது. இதனால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த நிறுவனங்களில் பணிகளில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும். வேலை வாய்ப்பு பெருகும்.

2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டோம்.. இந்திய வளர்ச்சிக்கு புதிய கொள்கை வழிவகுக்கும்.. பிரதமர் மோடி 2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டோம்.. இந்திய வளர்ச்சிக்கு புதிய கொள்கை வழிவகுக்கும்.. பிரதமர் மோடி

Recommended Video

    RSS திட்டங்கள் ! பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..

    வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை நாட்டுக்கு சொந்தமானது. அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. ஆனால், கல்வி கொள்கை அனைவருக்கும் சொந்தமானது. புதிய கல்விக் கொள்கையானது, படிப்பதற்குப் பதிலாக கற்றலில் கவனம் செலுத்த உதவுகிறது. இக்கட்டான சூழலில் கூட எவ்வாறு நாம் செயல்பட வேண்டும் என்பதை சிந்திப்பதற்கு தூண்டும் வகையில் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இந்தக் கொள்கையில், ஆர்வம், நடைமுறை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    English summary
    PM Modi says new educational policy gives learning instead of studying
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X