டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்... கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட இது நேரமல்ல -மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியமான காலகட்டத்தில் இந்தியா இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    லாக்டவுன் 4.0 மாறுபட்டதாக இருக்கும் - பிரதமர் மோடி அறிவிப்பு

    மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிட இது சரியான நேரமல்ல என்றும், இந்த நெருக்கடியை இந்தியாவுக்கான வாய்ப்பாக நாம் பயன்படுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது என்றும், முன்னேற்றப் பாதையில் இப்போது இந்தியா அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

    pm modi says, We are at critical juncture in fight agaist corana

    இதுவரை இல்லாத நெருக்கடியை நாடு சந்தித்து வருவதாகவும், இருப்பினும் கொரோனாவை ஒழிப்பதில் நாம் நிச்சயம் வெற்றிக்கொள்வோம் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக வெகுதூரம் பயணித்துள்ளோம் எனக் கூறிய மோடி, தன்னம்பிக்கை மிகுந்த நாடாக உலக அரங்கில் நாம் உருவெடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

    21ம் நூற்றாண்டு நமக்கானது.. உலகையே இந்தியாதான் இனி வழி நடத்த போகிறது.. பிரதமர் மோடி நம்பிக்கை!21ம் நூற்றாண்டு நமக்கானது.. உலகையே இந்தியாதான் இனி வழி நடத்த போகிறது.. பிரதமர் மோடி நம்பிக்கை!

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை இந்தியா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் உலகளவில் பாராட்டை பெற்றுள்ளதாகவும், சுயசார்பில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்திய மருந்துகள் உலகத்திற்கே நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், உலகநாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை தரும் கலங்கரை விளக்காக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    புதிய விடியலை நோக்கி இந்தியா செல்வதால் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெறப்போவது உறுதி என பிரதமர் மோடி உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English summary
    pm modi says, We are at critical juncture in fight agaist corana
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X