டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாந்தோன்றிதனமா எதுவும் செய்யாம ஜனநாயகபூர்வ திட்டங்களை கொண்டு வாங்க.. மோடிக்கு திருமா கோரிக்கை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தொல் திருமாவளவன் பேட்டி-வீடியோ

    டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் ஜனநாயக பூர்வமாக திட்டங்களை அறிவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

    இதன் மூலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு பாஜக அரசு நீடிக்கவுள்ளது. பாஜக இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

    சட்டசபையில் எதிர்க்கட்சியின் பலம் கூடுகிறது.. திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு! சட்டசபையில் எதிர்க்கட்சியின் பலம் கூடுகிறது.. திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு!

    டெல்லியில் திருமா

    டெல்லியில் திருமா

    இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாகியுள்ள விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார், அவருடன் எம்பி ரவிகுமாரும் சென்றுள்ளார்.

    ஜனநாயக பூர்வ திட்டங்கள்

    ஜனநாயக பூர்வ திட்டங்கள்

    இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அடுத்த 5 ஆண்டு காலத்தில் தாந்தோன்றி தனமான முடிவுகளை எடுக்காமல், ஜனநாயக பூர்வமாக திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இந்தியாவிற்கே வழிகாட்டும்

    இந்தியாவிற்கே வழிகாட்டும்

    ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் தகுதியை பெற்றுள்ளதாக நம்புகிறேன்.

    ஆறுதல் அளிக்கிறது

    ஆறுதல் அளிக்கிறது

    திமுகவைபோன்று வடமாநிலங்களில் வலுவான கூட்டணி அமைக்காததால் பாஜக வெற்றி பெற்றது. வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

    English summary
    VCK leader Thirumavalavan requesting PM Modi to announce democratic plans for next five years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X