• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சீனா கிளப்பும் பீதி.. ரஷ்ய அதிபர் புடினுக்கு போனை போட்ட பிரதமர் மோடி.. என்ன பேசினார்கள்.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: சீன பிரச்சனை தகதகவென தகித்து கிடக்க, ரஷ்யாவுக்கு போன் போட்டு அதிபருக்கு வாழ்த்து சொல்லி உள்ளார் பிரதமர் மோடி.. அது மட்டுமில்லை.. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளார். சீனாவுடன் உறவு அந்தரத்தில் தொங்கி கிடக்க, ரஷ்ய அதிபரை நம் நாட்டுக்கு பிரதமர் அழைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  India China Border | Modi in Leh Boost to Soldiers

  ரஷ்ய அதிபர் புதின் செம ஹேப்பியாக இருக்கிறார்.. காரணம், அவரது பதவி நீட்டிப்புதான்.. பொதுவாக, ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் என்பது 6 வருஷம் ஆகும்.. மேலும் ஒருவரே 2 முறை பதவியில் நீடிக்கவும் முடியாது.. அது அந்நாட்டு சாசனப்படி செல்லவும் செல்லாது.

  ஆனால், புதினை பொறுத்தவரை கடந்த 2000-ம் வருஷத்தில் இருந்து 2008-ம் வருஷம் வரை பதவி வகித்தார். அதற்கு அப்படியே தொடர்ந்தார்.. அதாவது, 2008-ல் இருந்து 2012-ம் வரை பிரதமராக பதவி வகித்தார்.. கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, புதின் அதிபர் பதவியை வகித்து வருகிறார்.

  அதே அதே "பேட்டர்ன்".. சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது.. லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை.. பின்னணி!

   பதவி நீட்டிப்பு

  பதவி நீட்டிப்பு

  இப்போது, அவருக்கு 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் இருக்கிறது.. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த நிலையில், திரும்பவும் பதவி நீட்டிப்பது என்பது சாத்தியமாகி உள்ளது. அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு அது பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.

  ஒப்புதல்

  ஒப்புதல்

  அவையில் நிறைவேற்றினாலும், மக்களின் ஓட்டும், ஒப்புதலும் முக்கியம் என்று புதின் கருதினார்.. அதன்படியே வாக்கெடுப்பு கடந்த 25ம் தேதி முதல் நடந்தது.. 7 நாட்கள் நடந்த இந்த வாக்கெடுப்பில், ஓட்டு எண்ணும் பணியும் நடந்தது.. 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டபோதே, புதினுக்கு 76.9 சதவிகித வாக்குகள் ஆதரவாக கிடைத்துவிட்டது.. அப்படியென்றால், அவரது பதவிக்காலம் நீட்டிப்பு சாத்தியமாகி உள்ளது. அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

  வாக்கெடுப்பு

  வாக்கெடுப்பு

  இது வழக்கம்போல், அங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு வயித்தெறிச்சலை தந்துள்ளது... வாக்கெடுப்பே சுத்த பொய் என்று பழியை போட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை முறை பதவியில் வகித்து வரும், வகிக்க போகும் ரஷ்ய அதிபருக்கு உலக நாடுகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.. அந்த வகையில் நம் பிரதமர் மோடியும் போனை போட்டு புதினுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.

   சிறப்பான நடவடிக்கை

  சிறப்பான நடவடிக்கை

  கடந்த ஜுன் 24-ம் தேதியன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியப் படையினர் பங்கேற்றதை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்தார். மேலும், கொரோனாவைரஸில் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய, இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.

   உச்சிமாநாடு

  உச்சிமாநாடு

  தொற்றுக்கு பிறகு உலகம் எதிர்கொள்ளப் போகும் சவால்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தையும் இருவரும் ஒப்புக் கொண்டனர். அதேபோல, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் வருடாந்தர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான இரு தரப்பு தொடர்புகள், ஆலோசனைகளை தொடருவதென்றும் இருவரும் ஒப்புக் கொண்டனர்.

  அழைப்பு

  அழைப்பு

  வெறும் வாழ்த்துடன் இல்லாமல், இந்தியாவுக்கு வாங்களேன் என்று ஒரு அன்பு அழைப்பையும் விடுத்துள்ளார்.. இதுதான் சற்று கவனிக்க வேண்டி உள்ளது. சீனாவுடன் பயங்கரமான பிரச்சனை நமக்கு வந்துள்ளது.. இன்னும் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு சுமூகமாக முடியும் என்று தெரியவில்லை.. ஆனால் இப்போதைக்கு உறவு சீர்கெட்டுள்ளது.

   நம்பிக்கை

  நம்பிக்கை

  இந்த சமயத்தில் ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இணக்கமானது தைரியத்தின் உச்சமாகவும், நட்புறவின் பிடிப்பாகவும் பார்க்கப்படுகிறது.. ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வந்தால், வர்த்தகம் உட்பட அனைத்துமே நமக்குள் மேம்படும் என்ற நம்பிக்கையும் சேர்ந்தே துளிர்க்கிறது.

  English summary
  pm modi speaks to russian president vladimir putin
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X