டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா- அமெரிக்கா வர்த்தக கவுன்சில் ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கவுன்சில் சார்பாக இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்தல் என்பது மையப் பொருளாகும்.

இந்திய, அமெரிக்க அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக, சமூக துறைகளின் கருத்தாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் உரையாற்றுவார்.

Newest First Oldest First
9:26 PM, 22 Jul

இந்தியாவின் சுகாதாரத்துறை வருடத்திற்கு 22 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியுடன் விளங்குகிறது- மோடி உரை. பாதுகாப்புத் துறை, விண்வெளித் துறையில், அன்னிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பு 74% என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது- மோடி உரை.
9:13 PM, 22 Jul

இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக வேகமாக மேம்படுத்தப்படுகிறது. அமெரிக்க முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்- ஐடியாஸ் உச்சி மாநாட்டில் மோடி பேச்சு. 8 வருடங்களில் இந்தியாவின் விமான போக்குவரத்து இரட்டிப்பு மடங்கு வளர்ச்சியடைய உள்ளது. விமான போக்குவரத்து துறையில் முதலீடு செய்யவும் உங்களை அழைக்கிறேன்- மோடி பேச்சு.
9:10 PM, 22 Jul

இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் தொழில் சிறப்பாக வளரப்போகிறது- மோடி. இந்தியாவின் விவசாயத்துறை சிறப்பான வளர்ச்சியடையும் காலகட்டம் இதுதான். இந்தியா-அமெரிக்கா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை.
9:00 PM, 22 Jul

இந்தியா-அமெரிக்கா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
7:39 PM, 22 Jul

இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம்- ஐடியாஸ் உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் உரை
7:39 PM, 22 Jul

உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்கியுள்ளது. இந்தியா அமெரிக்கா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் பேச்சு
7:27 PM, 22 Jul

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதார பேக்கேஜ் பலன் கொடுத்துள்ளது- அமெரிக்க-இந்திய ஐடியாஸ் உச்சிமாநாட்டில் உரை
6:59 PM, 22 Jul

வணிகத்தை தாண்டிய நட்பு இந்தியா-அமெரிக்கா இடையே தேவை- வெளியுறவுத்துறை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
6:56 PM, 22 Jul

அமெரிக்கா புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்- இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
6:27 PM, 22 Jul

இந்தியா-அமெரிக்கா ஐடியாஸ் உச்சிமாநாடு துவக்கம். பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு உரையாற்றுகிறார்.
5:48 PM, 22 Jul

இந்தியா-அமெரிக்கா உச்சி மாநாட்டில், கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தின் இரு நாட்டு உறவுகள் பற்றி விவாதிக்கப்பட வாய்ப்பு
5:46 PM, 22 Jul

இந்தியா-அமெரிக்கா ஐடியாஸ் உச்சிமாநாட்டில் இரவு 9 மணிக்கு உரையாற்றுகிறேன்- பிரதமர் மோடி ட்வீட்
5:39 PM, 22 Jul

பிரிட்டனுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹலேவும் உரை நிகழ்த்துகிறார்
5:39 PM, 22 Jul

வெர்ஜினியா மாகாண செனட்டர் மற்றும் செனட் இந்தியா காக்கசின் துணைத் தலைவர் மார்க் வார்னர் பங்கேற்கிறார்
5:39 PM, 22 Jul

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ இந்த நிகழ்வில் பங்கேற்பு

Modi
English summary
Prime Minister Narendra Modi will today deliver the keynote address at the India Ideas Summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X