டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

PM Modi on CoronaVirus LIVE: மார்ச் 22ம் தேதி மக்களின் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் - மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், உலகப் போருக்கு இணையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. சுமார் 170க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய அரசும் மாநில அரசும் கொரோனாவை தடுக்கவும் எதிர்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை இடைவிடாமல் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளுதல் தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.

பிரதமர் மோடியின் உரையின் அப்டேட்களை இப்பக்கத்தில் காணலாம்.

Newest First Oldest First
9:48 PM, 19 Mar

பிரதமர் மோடியின் மக்களின் ஊரடங்குக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதரவு-
9:39 PM, 19 Mar

கொரோனா தொடர்பாக பிரதமரின் அறிவுரைகளுக்கு முழு ஆதரவு - ப. சிதம்பரம்
9:38 PM, 19 Mar

முகக் கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
8:31 PM, 19 Mar

கொரோனாவுக்காக விடுப்பு வழங்கினால் ஊதிய பிடித்தம் செய்யக் கூடாது
8:27 PM, 19 Mar

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை
8:27 PM, 19 Mar

நமக்காக உழைப்பவர்களுக்கு மார்ச் 22-ல் மாலையில் நன்றி செலுத்துவோம்
8:25 PM, 19 Mar

கொரோனா கொள்ளை நோயால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது
8:23 PM, 19 Mar

மார்ச் 22 ஞாயிறன்று பொதுமக்கள் வெளியே வராமல் ஊரடங்கை தாங்களே அமல்படுத்த வேண்டும்
8:22 PM, 19 Mar

மார்ச் 22ம் தேதி காலை 5 மணிக்கு நாடு முழுவதும் சைரன் ஒலிக்கப்படும் - மோடி
8:20 PM, 19 Mar

மார்ச் 22 ஞாயிறன்று கடைபிடிக்கும் சுய ஊரடங்கு உத்தரவு எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க உதவும்
8:19 PM, 19 Mar

கொரோனா போன்ற சவால்களை சந்திக்க நாம் எப்படி தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை அறிய இது உதவும் - மோடி
8:18 PM, 19 Mar

மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்
8:18 PM, 19 Mar

ஒவ்வொரு நாளும் மக்கள் தலா 10 பேரை போனில் அழைத்து இதுகுறித்து விளக்க வேண்டும் - பிரதமர் மோடி
8:17 PM, 19 Mar

போர்க்காலம் போன்ற கட்டுப்பாட்டை மக்களிடம் எதிர்பார்க்கிறேன். மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவு நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்
8:16 PM, 19 Mar

இது மக்களின் ஊரடங்கு.. மக்களுக்காக அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடு - பிரதமர் மோடி. மக்களின் இந்த ஊரடங்கு நாம் மேலும் பல சோதனைகளை தைரியமாக சந்திக்க உதவும் - பிரதமர் மோடி
8:16 PM, 19 Mar

நாட்டின் மூத்த குடிமக்கள் சில நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
8:14 PM, 19 Mar

மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- வீட்டில் இருந்து பணி செய்யுங்கள்
8:12 PM, 19 Mar

சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்
8:11 PM, 19 Mar

கொரோனாவை எதிர்கொள்ள சமூக ஒன்று கூடலை தவிர்ப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். 130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க வர வேண்டும்
8:10 PM, 19 Mar

மக்களின் கவலையானது அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். கொரோனா பரவும் முறையை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது
8:09 PM, 19 Mar

கொரோனா பாதித்த நாடுகளில் மேற்கொள்ள ஆய்வுகளில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன
8:08 PM, 19 Mar

கொரோனா பாதித்த நாடுகளில் நோயின் தாக்கம் திடீரென தீவிரமாக அதிகரித்து வருகிறது. உடனே நடவடிக்கை எடுத்த நாடுகள் கொரோனாவை தடுத்து விட்டன
8:07 PM, 19 Mar

உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது
8:07 PM, 19 Mar

கொரோனா நோய்க்கு மருந்து இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை
8:07 PM, 19 Mar

மக்களின் ஆசியால்தான் எமது முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன
8:07 PM, 19 Mar

மக்களின் ஆசியால்தான் எமது முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. கொரோனா நோய்க்கு மருந்து இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது
8:05 PM, 19 Mar

கொரோனா வைரஸால் உலகம் மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. உலகப் போர்களுக்கு இணையான மிகப் பெரும் சேதத்தை கொரோனா உருவாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது
8:02 PM, 19 Mar

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்
8:00 PM, 19 Mar

அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை மாலை 4 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை
5:32 PM, 19 Mar

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை
READ MORE

PM Modi to address nation on today live updates
English summary
PM Modi Speech on CoronaVirus Live Updates in Tamil: Prime Minister Narendra Modi will address the nation today night on the situation of coronavirus outbreak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X