டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழாக்காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது - மோடி வேண்டுகோள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் தற்போது விழாக் காலங்கள் என்பதால் பொதுமக்கள் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது முதல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதியில் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலமும் மக்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார்.

அதில், கொரோனா பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை மோடி வலியுறுத்தி இருந்தார். தற்போது பெரும்பாலான கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன.

ராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத் ராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்

கொரோனா தாக்கம் குறைவு

கொரோனா தாக்கம் குறைவு

நாடு முழுவதும் பரவலாக கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்தும் வருகிறது. அதேநேரத்தில் பண்டிகை காலங்கள் என்பதால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிக எண்க்கையில் கூடி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கி வருகிறது.

நாட்டு மக்களிடம் மோடி உரை

நாட்டு மக்களிடம் மோடி உரை

இந்த நிலையில் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களிடையே ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி மாலை 6 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது: கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கொரோனா போர் நீடிக்கும்

கொரோனா போர் நீடிக்கும்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது. தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவோர் எண்ணிக்கை 88% ஆக உள்ளது. லாக்டவுனை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. விழாக்காலம் என்பதால் கொரோனாவை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிடக் கூடாது.

கட்டுப்பாடுகள் அவசியம்

கட்டுப்பாடுகள் அவசியம்

கொரோனா லாக்டவுன் முடிந்த போதும் வைரஸ் பாதிப்பு தொடரவே செய்கிறது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
PM Modi tweets that "Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X