டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர் பதவி மறுப்பு- ஜேட்லி வீட்டுக்கு சென்று மறுபரிசீலனை செய்ய மோடி வலியுறுத்தல்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்த மூத்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜேட்லியிடம் மோடி வலியுறுத்தினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் அமிருதசரஸ் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங்கிடம் அருண் ஜெட்லி தோற்றார்.

 PM modi to ask Arun Jaitley to reconsider his earlier decision and remain in Government

இருந்த போதிலும் அருண் ஜெட்லி மீது மாறாத அன்பில் இருந்த மோடி, அவரை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய வைத்தார். அதன்பின்னர் மத்திய நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இரட்டை பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் நிதியமைச்சர் பொறுப்பை மட்டும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு முக்கியமான தலைவர்கள் என்றால் அது அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் ஜெட்லி மட்டும்தான் பாஜகவின் நம்பிக்கையின் பலமாக நாடாளுமன்றங்களில் திகழ்ந்தார். அவர் தான் எதிர்க்கட்சிகளின் எப்படிப்பட்ட கேள்விக்கும் அற்புதமாக பதில் அளிப்பார். ஆனால் அவருக்கு கடந்த 18 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலை காணப்படுகிறது.

சில்லென்ற மழையால் ஜில்லென மாறிய மாவட்டங்கள்.. நாளை தமிழகத்தில் இடிமழை இருக்காம் சில்லென்ற மழையால் ஜில்லென மாறிய மாவட்டங்கள்.. நாளை தமிழகத்தில் இடிமழை இருக்காம்

இதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என மோடியிடம் தெரிவித்து இருந்தார்.இப்போது அதிகாரப்பூர்வமாகவே மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனால் அருண் ஜெட்லி இல்லாத நாடாளுமன்றத்தை நினைத்து பார்க்க முடியாத பிரதமர் மோடி, அவரை நேரில் சந்திக்க முடிவு செய்தார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள ஜெட்லியின் இல்லத்துக்கு இன்று இரவு சென்ற பிரதமர் மோடி அமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவினை கைவிடுமாறு வலியுறுத்தினார், மேலும் ஜேட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

English summary
Prime Minister Narendra Modi rive down to Arun Jaitley's residence today. PM to ask Arun Jaitley to reconsider his earlier decision and remain in Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X