டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் டிஜிபிக்கள் மாநாடு.. இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. முக்கிய ஆலோசனை!

Google Oneindia Tamil News

டெல்லி : மாநில காவல்துறை டிஜிபிக்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.

PM Modi to attend All india police conference today

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய காவல் படை தலைவர்களின் மாநாட்டை நடத்துவதில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார்.

இதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த 3 நாள் மாநாடு நேரடி மற்றும் காணொளிக்காட்சி என இருவகைகளிலும் நடைபெறுகிறது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கின்றனர். மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

 உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர் மோடிதான்.. பிரிட்டன் எம்பி ஒரே போடு! வியந்த பிரிட்டன் நாடாளுமன்றம் உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர் மோடிதான்.. பிரிட்டன் எம்பி ஒரே போடு! வியந்த பிரிட்டன் நாடாளுமன்றம்

இந்த மாநாட்டில் காவல்துறை மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள், சைபர் கிரைம் தொழில் நுட்பங்கள், பயங்கரவாத தடுப்பு சவால்கள், இணையதள குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பங்கள், மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
A three-day conference in which State Police DGPs are participating started yesterday at Delhi. PM Modi will participate in this conference today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X