டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு முறைப் பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: அரசு முறைப் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.

சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத், இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத் ஆகியோரின் அழைப்பை ஏற்று இன்று சவுதி செல்கிறார் மோடி. 2 நாட்கள் பயணமாக செல்லும் மோடி, ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3ஆவது அமர்வில் கலந்து கொள்கிறார். இதில் அவர் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுகிறார்.

PM Modi to embark on two-day visit to Saudi Arabia today

அவர் சவுதி மன்னரையும் இளவரசரையும் சந்தித்து பேசுகிறார். பாஜக ஆட்சி இரண்டாவது முறையாக தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக மோடி அரேபியா செல்கிறார்.

பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... பிடிவாதம் பிடிக்கும் கமல்பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... பிடிவாதம் பிடிக்கும் கமல்

இதற்காக பிரதமரின் போயிங் 747 விமானம் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியிலிருந்து பிரதமரின் விமானம் மும்பை செல்லும். அங்கு அரபிக் கடல் பகுதியிலிருந்து ரியாத்துக்கு செல்லும்.

இதனால் ரியாத் செல்ல கூடுதலாக 45 நிமிடங்கள் ஆகும். அரபிக் கடலில் நிலைக் கொண்டுள்ள கியார் புயலால் பிரதமரின் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

English summary
PM Narendra Modi's visit to Saudi Arabia to take part in Future Investment Initiative forum in Riyadh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X