டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதானி, பிபிசி.. நாடாளுமன்றத்தில் அமளி செய்ய போகும் எதிர்க்கட்சிகள்.. மோடி இன்று முக்கிய மீட்டிங்

நாடளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொண்டு வர வேண்டிய மசோதாக்கள், சிறப்பு அறிவிப்புகள் போன்றவை பற்றி ஆலோசனை செய்ய உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு அமைச்சர்களை சந்தித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மறுநாள் நடக்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் பிரதமர் மோடி அரசால் கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அடுத்த வருடம் தேர்தல் என்பதால் அடுத்த வருட தொடக்கத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் அதிகம் கவனம் பெறுகிறது. ஆக இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

மோடி, அமித் ஷா, ஆளுநர் ரவி.. மூவருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக உள்ளார்.. உதயநிதி பேச்சு! மோடி, அமித் ஷா, ஆளுநர் ரவி.. மூவருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக உள்ளார்.. உதயநிதி பேச்சு!

பட்ஜெட்

பட்ஜெட்

இது சாமானிய மக்கள் தொடங்கி, தொழில்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் 2024ல் இடைக்கால பட்ஜெட் அறிக்கையை மட்டுமே மோடி அரசால் தாக்கல் செய்ய முடியும். இந்த வருடம் நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளதால் இன்று இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.

அமைச்சரவை

அமைச்சரவை

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு அமைச்சர்களை சந்தித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் நடக்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். நாடளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கொண்டு வர வேண்டிய மசோதாக்கள், சிறப்பு அறிவிப்புகள் போன்றவை பற்றி ஆலோசனை செய்ய உள்ளார். இந்த முறை நாடாளுமன்றத்தில் அதானி விவகாரமும், பிபிசி ஆவணப்பட விவகாரமும் புயலை கிளம்பும் வாய்ப்புகள் உள்ளன.

அதானி

அதானி

அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது என்று ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அதானி பங்குகள் சரிந்துள்ளன. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்த எல்ஐசி பங்குகள் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து உள்ளது. அதானி உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது.

ஹிண்டர்ன்பர்க்

ஹிண்டர்ன்பர்க்

ஹிண்டர்ன்பர்க் கடந்த ஜனவரி 25 புகார் வைத்த அன்றே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன. அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை என்று விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் குஜராத் கலவரம் குறித்து பிபிசி இயக்கியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதுவும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், இந்த கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் 'India: The Modi Question' எனும் ஆவணப்படத்தை இயக்கியது. இந்த ஆவணப்படத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்தாக மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
PM Modi to hold a cabinet meeting today with minister ahead of budget assembly on Feb 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X