டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கங்கை தூய்மை திட்டம்.... 6 புதிய திட்டங்கள்... காணொளி மூலம் இன்று பிரதமர் துவக்கி வைப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் இன்று உத்தரகண்டில் 6 புதிய திட்டங்களை காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இத்துடன் ஜல் ஜீவன் மிஷனுக்கான லோகோவையும் இன்று காலை 11 மணிக்கு அறிமுகம் செய்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''ஜல் ஜீவன் சமிதி மற்றும் ஹர கர் ஜல் ஆகிய திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பிரதமர் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.

PM Modi to inaugurate 6 mega projects in Uttarakhand under namami gange today

கங்கை நீரை சுத்தம் செய்யும் வகையில் ஆறு புதிய திட்டங்களை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். ஜக்தீத்பூர், ஹரித்துவார், சராய் ஆகிய இடங்களில் கங்கை நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த திட்டங்களை இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

சந்தேஷ்வர் நகரில் நாட்டிலேயே முதன் முறையாக நான்கு அடுக்குமாடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம். பொதுவாக இந்தளவிற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஆனால், வெறும் 900 சதுர மீட்டருக்கும் குறைவான இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடிஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நீரை சுத்தம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் 100 சதவீதம் முடிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கங்கை ஆற்றுக்கு அருகில் இருக்கும் 17 நகரங்களும் தூய்மை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

மேலும், கங்கை ஆறு குறித்த வரலாறு, அதை ஒட்டிய பண்பாடு ஆகியவை குறித்து அமைக்கப்பட்டு இருக்கும் மியூசியத்தையும் திறந்து வைக்கிறார். இந்த மியூசியம் ஹரித்துவாரில் சாந்தி காட் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

English summary
PM Modi to inaugurate 6 mega projects in Uttarakhand under namami gange today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X