டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டின் விழிப்பான இந்தியா - வளமான இந்தியா'' காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.

நம் நாட்டில் வருடந்தோறும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.. இதில், "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்னும் கருப்பொருளில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி, இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார்.

 PM Modi to inaugurate conference on vigilance and anti corruption today

அப்போது உரை நிகழ்த்திய பிரதமர், "நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்கு பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்... ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.. ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது" என்று பெருமைபட கூறினார்.

எரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்! எரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்!

மத்திய புலனாய்வுப் பிரிவு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் ஊழல் தடுப்பு மற்றும் அமைப்புகளின் கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.. இதுதவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

English summary
PM Modi to inaugurate conference on vigilance and anti corruption today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X