டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பில்கேட்ஸ் அளிக்கப்போகும் சூப்பர் கௌரவம்.. ஏன் தெரியுமா!

Google Oneindia Tamil News

டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பில்லியனரான பில்கேட்ஸின் நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டது. பல இடங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

PM Modi to receive award from Bill & Melinda Gates Foundation for Swachh Bharat Abhiyaan

இதேபோல் தூய்மை பராமரிப்பதற்கான நடவடிக்கைள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தை பாராட்டி உள்ள அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் போது, இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.

மத்திய வடகிழக்கு பிரதேசங்கள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு விருது வழங்க உள்ள தகவலை உறுதி செய்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தனது விடாமுயற்சி மற்றும் புதுமையால் மேலும் ஒரு விருதைப் பெற்று, உலக தரத்திற்கு நம்மை கொண்டு சென்று ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையில் செய்துள்ளார்.

ஒரே சரவெடிதான்.. யாருப்பா தமிழக பாஜக ட்விட்டர் அட்மின்.. எங்கப்பா இருந்தீங்க இவ்வளவு நாளா!ஒரே சரவெடிதான்.. யாருப்பா தமிழக பாஜக ட்விட்டர் அட்மின்.. எங்கப்பா இருந்தீங்க இவ்வளவு நாளா!

அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளும் போது தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் விருதைப் பெற உள்ளார்..

English summary
PM Modi to receive award from Bill & Melinda Gates Foundation for Swachh Bharat Abhiyaan during his visit to the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X