டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று மாலை தொண்டர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி:லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் முடிவுகளில் துவக்கம் முதலே பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் 300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால், மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏற இருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியும் இன்று மாலை 5.30 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாஜக வெற்றி குறித்தும், ஆட்சி அமைப்பதும் ஆலோசனைகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

PM Modi to visit Delhi BJP office evening

மேலும், அங்கு வரும் தொண்டர்கள் மத்தியில் மோடி பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பாராளுமன்ற வாரியக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்' பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'

இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்படும். இந்த கூட்டத்தின் இடையே பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேச இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பொள்ளாச்சியில் கொட்டி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது பொள்ளாச்சியில் கொட்டி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது

மேலும், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தலைவர்களும்,, தொண்டர்களும் குவிந்து வருவதுடன், அங்கு கொண்டாட்டங்களும் களை கட்டி இருக்கின்றன. இன்று மாலை 20,000 தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

English summary
According to reports, PM Modi to visit Delhi BJP office in the evening today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X