டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் ஆய்வு.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?

தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் சைடஸ், பாரத் பயோடெக், சீரம் ஆகிய 3 நிறுவனங்களிலும் பிரதமர் மோடி இன்று தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். மேற்கொள்கிறார்... இதையடுத்து, அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

இன்னமும் உலகத்தையே உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனா.. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அதற்கான முயற்சியில் ஏராளமான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளன.

"ஆமா.. ஒவ்வொன்னாதானே பார்க்க முடியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா?".. கடலூரில் தெறிக்க விட்ட முதல்வர்

டெஸ்ட்

டெஸ்ட்

அந்த தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி, டெஸ்ட் செய்தும் வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் சேர்ந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

உரிமம்

உரிமம்

இந்த தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது.. மேலும், நம் நாட்டில் 15 நகரங்களில் கோவி ஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையையும் நடத்தி வருகின்றன. இந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, உலக அளவில் பெரும் அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாகும்.

நம்பிக்கை

நம்பிக்கை

இதனிடையே, கோவி ஷீல்ட் 3-ம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கவை என்றும், இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலனளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.. அதுமட்டுமில்லை, இதுவரை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட யாருமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வரவில்லை, அவர்களுக்கு நோயும் தீவிரமாகவில்லை என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்திருந்தது.

பரிசோதனை

பரிசோதனை

அதன்படி முதலாவதாக, ஆமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் - டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார்... அப்போது சைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.. மேலும் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார். இதையடுத்து, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்தார். மேலும், அந்த நிறுவனத்தை பார்வையிட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியையும் ஆய்வு செய்தார். இந்த மருந்து இப்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 முக்கிய அறிவிப்பு?

முக்கிய அறிவிப்பு?

அப்போது அந்த தடுப்பூசியின் உற்பத்தி, அதன் தயாரிப்பு, பாதுகாப்பு, பக்க விளைவுகள் ஏதாவது ஏற்பட வாய்ப்புள்ளதா போன்ற அனைத்தையும் விஞ்ஞானிகளிடம் கேட்டறிவார் என்று தெரிகிறது.. மேலும், அந்த தடுப்பூசியின் விலை, அதை எப்படி மக்களுக்கு விநியோகிப்பது, தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சவால்கள், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க எடுத்துக்கொள்ளும் காலம், என்பவை பற்றியும் கேட்டறிய போகிறார்.. இந்த இந்த ஆய்வுக்கு பிறகு, சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பரிசோதனை

பரிசோதனை

அதன்படி முதலாவதாக, ஆமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் - டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார்... அப்போது சைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.. மேலும் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

பாரத் பயோடெக்

பாரத் பயோடெக்

இதையடுத்து, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்தார். மேலும், அந்த நிறுவனத்தை பார்வையிட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியையும் ஆய்வு செய்தார். இந்த மருந்து இப்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.. இதுகுறித்து பிரிதமர் மோடி பதிவிட்ட ட்வீட்டில், "இந்த பாரத் பயோடெக் ஆய்வகத்தில், கொரோனா தடுப்பு மருந்து குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சோதனையில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பணிகளை துரிதபடுத்துவது குறித்து, விஞ்ஞானிகள் குழுவினர், ஐசிஎம்ஆர் அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார்.

புனே

புனே

பின்னர், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை பிரதமர் ஆய்வு செய்தார். இந்த நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. 3 இடங்களிலுமே பிரதமர் ஆய்வு செய்த நிலையில், தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ரப்பு எகிறி வருகிறது.

English summary
PM Modi to visit Three covid vaccine facilities in Pune, Ahmedabad, and Hyderabad today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X