டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாகவும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அலங்கார ஊர்தி: மத்திய அரசுக்கு இப்படி ஒரு வார்னிங் கொடுங்க முதல்வரே- அதிரும்ல...பழ.நெடுமாறன் அட்வைஸ் அலங்கார ஊர்தி: மத்திய அரசுக்கு இப்படி ஒரு வார்னிங் கொடுங்க முதல்வரே- அதிரும்ல...பழ.நெடுமாறன் அட்வைஸ்

 பட்ஜெட் கூட்டத்தொடர்

பட்ஜெட் கூட்டத்தொடர்

அதன்படி, ஜனவரி 31-ந் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14-ந்தேதியிலிருந்து ஏப்ரல் 8-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது... 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

சமீப காலமாகத்தான், கொரோனாவைரஸ் தாக்குதலில் இருந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கும் நிலையில் மறுபடியும் இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளது.. ஒமைக்ரான் வைரஸ் என்ற புது தொற்றும் பீதியை ஏற்படுத்தி கொண்டு, அதன்மூலம் உயிரிழப்புகளும் அதிகரிக்க துவங்கி உள்ளது.. இந்த தொற்று பாதிப்புகள் அடுத்தடுத்த சிக்கலையும் இங்கு ஏற்படுத்தியுள்ளது... இதனால், நாட்டின் ஏற்றுமதி, விமான போக்குவரத்து, உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எனவே, ஏழை எளிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையிலேயே, வரப்போகும் மத்திய பட்ஜெட் 2022 இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.. தனிநபர் வருமான வரி விகித மாற்றம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதையும் கடந்த பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை... ஆனால், நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கிறதென கடந்த பட்ஜெட்டின்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

இதேபோன்று டிஜிட்டல் முறையில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ. 3,768 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
PM Modi: Union Cabinet and Cabinet Committee on Economic Affairs in Delhi today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X