டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    யார் மகனாக இருந்தால் என்ன! வெளியே போட வேண்டும்: ஆவேசமான மோடி -வீடியோ

    டெல்லி: பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியாவின் மகனும், எம்எல்ஏவுமான, ஆகாஷ் விஜயவர்கியா மீது பிரதமர் நரேந்திர மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கிரிக்கெட் பேட்டால், அதிகாரியை தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் விஜயவர்கியா.

    "இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது யாருடைய மகனாக இருந்தாலும், விதிவிலக்கு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடி பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

     வரவேற்பா கொடுக்குறீங்க

    வரவேற்பா கொடுக்குறீங்க

    தாக்குதல் சம்பவத்திற்காக ஆகாஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது ஆகாஷ் விஜயவர்கியாவை நேரில் சென்று உற்சாகமாக வரவேற்ற நபர்களையும், கட்சியைவிட்டு, நீக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்துள்ளார்.

    வைரல் காட்சி

    கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் விஜயவர்ஜியா கடந்த வாரம் புதன்கிழமை, நகராட்சி அலுவலரை கிரிக்கெட் பேட்டால், விரட்டி விரட்டி அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பொது மக்கள் வசிப்பதாகவும், எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என எம்எல்ஏ ஆகாஷ் வாதிட்டார். வாக்குவாதம் முற்றவே, அதிகாரி ஒருவரை ஆகாஷ் பேட்டால் தாக்கினார். அப்போது எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடித்துள்ளனர்.

    கும்பல் வன்முறை

    கும்பல் வன்முறை

    இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவை அடாவடி கட்சியாக மக்களிடம் காட்டும் என்று மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே முஸ்லீம்களுக்கு எதிராக, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி, தாக்குதல்களும், கொலைகளும் நடப்பதாக பாஜகவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வன்முறைக்கு எதிராக முதல்முறையாக கட்சியினரை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார் பிரதமர்.

    English summary
    According to sources, Prime Minister Modi told in BJP parliamentary committee meeting that "anyone whose son is involved in such activities should be expelled from the party without exception."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X