டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; ஈழத் தமிழருக்கு உரிமை வழங்க வகை செய்யும் 13-வது அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

PM Modi urges to implement on 13th amendment to the Sri Lankan Constitution

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதா வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

PM Modi urges to implement on 13th amendment to the Sri Lankan Constitution

இலங்கையின் அரசியல் சாசனம் 13-வது திருத்தத்தில் ஈழத் தமிழருக்கு அதிகாரம் வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த 13-வது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக செயற்படுத்த வேண்டும். சமத்துவம், அமைதி, நீதி ஆகியவற்றை எதிர்பார்கின்றனர் தமிழர்கள். இதனை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

ஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு!! ஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு!!

PM Modi urges to implement on 13th amendment to the Sri Lankan Constitution

இலங்கையில் அமைதி, சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். மீனவர்கள் பிரச்சனையில் இருதரப்பும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PM Modi urges to implement on 13th amendment to the Sri Lankan Constitution
English summary
PM Modi emphasised that implementing the 13th amendment to the Sri Lankan Constitution is essential for carrying forward the process of peace and reconciliation with Srilanak PM Mahinda Rajapaksa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X