டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த கட்டத்துக்கு நகரும் பாஜக.. காங்கிரசின் கோட்டை ரேபரேலிக்கு நாளை செல்கிறார் மோடி !

ரேபரேலி தொகுதிக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த கட்டத்துக்கு நகரும் பாஜக, ரேபரேலிக்கு செல்கிறார் மோடி !-வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி நாளை சோனியா காந்தி தொகுதியான ரேபரேலிக்கு செல்ல உள்ளார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க போகிறார்.

    5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களை ரொம்பவே அசைத்து போட்டிருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய கூட்டங்களை நடத்தி விவாதமும், ஆலோசனையும் நடத்தி வருகிறார்கள்.

    எனினும் வரும் தேர்தலிலாவது விட்டதை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. என்னைக்கோ நடக்க போகிற தேர்தலுக்கு இப்பவே பிரதமர் மோடி இப்பொழுதே தன்னை ஆட்படுத்தி கொள்ள தயாராகி விட்டார்.

    சோனியா தொகுதி

    சோனியா தொகுதி

    தேர்தல் முடிவுகள் வந்து இத்தனை நாளும் அமைதியாகவே இருக்கும் மோடி, தனது அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நாளை ஆரம்பிக்கிறார்.

    பயண நேரம் குறைகிறது

    பயண நேரம் குறைகிறது

    குறிப்பாக சாலை போக்குவரத்து சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரேபரேலி - பதேபூர், பாண்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ.558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையுடன் 4 புறவழிசாச்சாலைகளும் இணைக்கப்படுவதால், பயணநேரம் குறைக்கப்படுகிறது. அதாவது, பயண தூரம் 7.8 மணி தூரத்திலிருந்து 2.5 மணி தூரமாக குறையும் என சொல்லப்படுகிறது.

    விமர்சனம்

    விமர்சனம்

    பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து மோடி ரேபரேலி தொகுதிக்கு போகவே இல்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். அதோடு இந்த தொகுதியை மோடி புறக்கணிக்கிறார் என்றும் எந்த வளச்சி திட்ட பணிகளையும் செய்யவே இல்லை என்ற விமர்சனமும் எதிர்க்கட்சி தரப்பில் எழுந்து வந்தது.

    திருப்பம்

    திருப்பம்

    இந்த குற்றச்சாட்டை உடைத்தெறிவதற்காகவே மோடி ரேபரேலி செல்வதாக கூறப்படுகிறது. முதல்முறையாக ரேபரேலிக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் தொகுதி என்றும் பார்க்காமல் நலத்திட்ட உதவிகளை மோடி செய்ய முனைவது பாஜகவுக்கு நல்ல ஒரு திருப்பத்தையே தரும் என நம்பலாம்.

    English summary
    PM Narendra Modi to visit Sonia Gandhis turf Rae Bareli tomorrow to Welfare Assistance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X