டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா விஷயத்தில் நாம் அலட்சியமாக இல்லாமல் அதற்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தமது மனதின் குரல்- மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடியின் 71-வது மனதின் குரல் நிகழ்ச்சி இது.

இன்றைய நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பு, கலாசார மதிப்பு, புதிய விவசாய சட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்:

விவசாயிகளுக்கான சட்டங்கள்

விவசாயிகளுக்கான சட்டங்கள்

இந்தியாவில் விவசாயம், அதனுடன் தொடர்புடையவைகளுடன் ஒரு பரிமாணம் இணைகிறது. விவசாயத்துறை சீர்திருத்தங்கள் விவசாயிகளின் வாழ்வில் புதிய சாத்தியங்களை ஏற்படுத்தி உள்ளன.

கொரோனாவை தடுக்க

கொரோனாவை தடுக்க

கொரோனாவை பொறுத்தவரையில் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. கொரோனாவை தடுப்பதற்கான நடத்தை விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

டிச.6 அம்பேத்கர் நினைவுநாள்

டிச.6 அம்பேத்கர் நினைவுநாள்

பாபாசாஹேப் அம்பேத்கரின் நினைவுநாள் டிசம்பர் 6. அவர் வடிவமைத்த அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றல்களை நாம் மீள்பதிவு செய்ய வேண்டும்.

விடைபெறும் 2020

விடைபெறும் 2020


2020- என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து நாட்டுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

ஶ்ரீஅரவிந்தரின் கோட்பாடு

ஶ்ரீஅரவிந்தரின் கோட்பாடு

ஶ்ரீ அரவிந்தரின் சுதேசி கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சுதேசி தொடர்பாக ஶ்ரீஅரவிந்தர் கூறியவற்றை நாட்டு மக்கள் அனைவரும் இன்று கடைபிடிக்க வேண்டும்.

ஶ்ரீ அரவிந்தரின் மறைவு தினம்

ஶ்ரீ அரவிந்தரின் மறைவு தினம்

டிசம்பர் 5-ந் தேதி ஶ்ரீஅரவிந்தரின் நினைவுதினம். ஶ்ரீ அரவிந்தரை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு ஆழம் ஏற்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minsiter Narendra Modi today addressed the nation through his monthly radio programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X