டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் சறுக்கியது எங்கே?.. இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் மோடி!

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய இன்று பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் சறுக்கியது எங்கே? ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் மோடி!

    டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய இன்று பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது.

    PM Modi will hold a meeting to discuss 5 state election loss

    சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என்று ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது.இந்த தேர்தல் தோல்வியை பிரதமர் மோடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

    இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தோல்வி குறித்து தற்போது பாஜக கட்சி ஆராய உள்ளது.

    5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய இன்று பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். அமைச்சர்கள், லோக் சபா பாஜக எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    காலை 10 மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து இதில் ஆலோசனை நடத்த உள்ளனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

    English summary
    PM Modi will hold a meeting to discuss the reasons behind 5 state election loss with BJP cadres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X