டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயேசு கிறிஸ்துவின் தைரியமும், சத்தியமும்.. மறக்காமல் கடைபிடிப்போம்.. மோடியின் புனித வெள்ளி வாழ்த்து

கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் புனித வெள்ளி வாழ்த்தினை பதிவிட்டு உள்ளார். இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடி வருகின்றனர்... இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக நினைவு கூறுவார்கள். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

 pm modi wishes christians on good friday and tweets on it

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமானது இந்த நாள்.. இயேசு உயிர்த்தெழுந்த ஞாற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமைகளில் இது நிகழும். அதனால் சர்ச்-களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கும்.

இந்த புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த புனித வெள்ளி அன்று, நாம் அமைதி, சக மனிதர்களிடம் இரக்கம் மற்றும் சுய தியாகத்தின் ஆவி ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவோம்" என்று கூறி புனித வெள்ளி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரதமர் மோடியும் புனித வெள்ளி வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அதில், "இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்... அவரது தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை... சமூகத்தில் அநீதி, வலி, துக்கங்களை அகற்றியவர்.. அவரது நேர்மையுணர்வும் தனித்தன்மை வாய்ந்தது.. புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் "என கேட்டு கொண்டுள்ளார்.

 pm modi wishes christians on good friday and tweets on it

இந்திய பிரதமர் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை.. அனைத்து மத, கலாச்சார நிகழ்வுகளுக்கும் வாழ்த்து கூறுவது அவரது கடமை என்றாலும் இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி வாழ்த்து சொல்லிய ட்வீட் அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

English summary
pm modi wishes christians on good friday and tweets on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X