டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயேசு சமத்துவம் பேசினார்.. அவரின் தியாகங்களை நினைத்து பார்ப்போம்.. மோடி டிவிட்!

நாம் இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாம் இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களில் புனித வெள்ளி மிக முக்கியமான நாளாகும். உலகம் முழுக்க இந்த பண்டிகை கிறிஸ்தவர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

PM Modi wishes for Good Friday in Twitter

பாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்! பாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

இந்த நிலையில் இன்று புனித வெள்ளி நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியும் புனித வெள்ளிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நாம் இன்று இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும். அவரின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், மிகவும் தைரியமான மனப்பான்மை ஆகியவை மக்களுக்கு பெரிய வலுவூட்ட கூடியது.

அவரின் அறிவுரைகள் இந்த உலகில் இருந்து அதர்மத்தையும், சமத்துவமின்மையையும் அகற்ற கூடியது என்று மோடி டிவிட் செய்துள்ளார்.

English summary
PM Modi wishes for Good Friday function in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X